Home செய்திகள் (News Articles) மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன ஏன் இன்கம்ஸ் இலவசம் இல்லை

மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன ஏன் இன்கம்ஸ் இலவசம் இல்லை

ஒரு முறை சிம் கார்டை வாங்கிட்டு எந்த ரிஜார்ஜும் செய்யாமல் வாழ் நாள் முழுவதும் இன்கம்மிங் கால்களை இலவசமாக பெறும் வசதியை ஏர்டெல் வோடாபோன் ஐடியா உள்ளிட்ட இந்தியாவின் பிரதான மொபைல் நெட் வொர்க் நிறுவனங்கள் கடந்த மாதம் முதல் நிறுத்தியுள்ளது.

இனி மாதா மாதம் வெலி-டிட்டியுடன் கூடிய ரிஜார்ஜ் செய்தால் மட்டுமே இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால் வசதிகளை பெற முடியும்.

ரிஜார்ஜ் செய்யாத இணைப்புகளை ஏர்டெல் வோடாபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது துண்டித்துள்ளது.
ஏன் நெட்வொர்க் நிறுவனங்கள் இந்த திடீர் முடிவை எடுத்தது இதன் பின்னணி என்ன என்ற தகவல்கள் நம்மை அதிர வைக்கின்றது. அதை இறுதியில் பார்ப்போம்.

தற்போது இந்த மாற்றத்தை தொடர்ந்து ஒரு சிம்கார்டை பயன்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

உதாரணத்திற்கு வோடாபோனில் 100 ரூபாய்ககு ரிஜார்ஜ் செய்துள்ளோம், அதற்கு 30 நாளைக்கு வெ-லிடிட்டி உள்ளது என்று வைத்துக் கொள்வோம். 100 ரூபாய்க்கு நீங்கள் அவுட் கோயிங் கால் செய்து கொள்ளலாம் , 10 நாளில் 100 ரூபாய் காலி-யாகி, 0 பேலன்ஸ் இருந்தாலும் அடுத்த 20 நாட்களுக்கு உங்களுக்கு இன்கம்மிங் கால் வரும். 30 நாள் முடிந்தவுடன் 15 நாள் அவகாசம் கொடுக்கப்படும்.

30 நாள் முடிந்து அடுத்த 15 நாட்களுக்கு தங்களுக்கு இன்கம்மிங் கால் இலவசமாக வரும். அதற்குள் நீங்கள் மறு ரிஜார்ஜ் செய்யவில்லை எனில் தங்களின் இணைப்பு நிறுத்தப்பட்டு இன்கம்மிங் வசிதியும் துண்டிக்கப்படும். ஆக 30 நாளைக்கு ரிஜார்ஜ் செய்தால் 45 நாட்களுக்கு மட்டுமே இன்கம்மிங் கால் வசதியை பெற முடியும்.

இதை வோடாபோன் கஸ்டமர் கேர் அதிகாரி நம்மிடம் உறுதி செய்துள்ளார். உங்கள் மொபைலில் வெ-லிட்டியை பரிசோதனை செய்தால் உங்களுக்கே இது தெரியவரும்.

கடைசியாக தாங்கள் எத்தனை நாள் வெலி-டிட்டி உள்ள பேக்கிற்கு ரிஜார்ஜ் செய்தீர்களோ அது தான் தங்களின் இறுதி வெலி-டிட்டியாக காண்பிக்கும்.

இந்த முடிவை ஏர்டெல் போன்ற பிரதான நெட்வொர்க் நிறுவனம் எடுக்க என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

இந்த அறிவிப்பின் பின்னணி என்ன

ஒரு வாடிக்கையாளர் மூலம் அதன் மொபைல் நெட்வொர்க் நிறுவனத்திற்கு இரண்டு வகையில் லாபம் கிடைக்கும். ஒன்று நாம் செய்யும் ரிஜார்ஜ் கள் மூலம், 2 வது, பிற நெட்வொர்க்கில் இருந்து நமக்கு ஒரு இன்கம்மிங் கால் வரும் பட்சத்தில் அதன் மூலமும் நமது நெட்வொர்கிற்கு லாபம் கிடைக்கும்.
இதை டெர்மினேஷன் ஜார்ஜ் என்பார்கள். அதாவது ஒரு மாதத்தில் நாம் எந்த ரிஜார்ஜும் செய்யவில்லை ஆனால் நமக்கு மற்ற நெட்வொர்க்கில் இருந்து 300 நிமிடம் இன்கம்மிங் கால் வந்துள்ளது என்று வைத்துக் கொள்வோம்.

தற்போது நமது நெட்வொர்க்கிற்கு ஒரு நிமிடத்திற்கு 14 பைசா வீதம் 42 ரூபாய் நமது இன்கம்மிங் கால் மூலம் லாபம் கிடைக்கும். இதே வெளிநாட்டில் இருந்து நமக்கு இன்கம்மிங் கால் வந்தால் நமது நெட்வொர்கிற்கு அதிக லாபம் கிடைக்கும்.

வெளிநாட்டு அழைப்பிற்கு ஒரு நிமிடத்திற்கு 53 பைசா டெர்மினேஷன் கட்டணம். இப்படி உள்நாடு வெளிநாட்டில் இருந்து நமக்கு வரும் இன்கம்மிங் கால்கள் மூலம் நமது மொபைல் நெட்வொர்க் நிறுவனம் லாபம் பெற்று வந்தன. இதனால் தான் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் இதுவரை நமக்கு இலவசமாக இன்கம்மிங் கால் வசதியை அளித்தனர். ஆனால் தற்போது இந்த டெர்மினேசன் கட்டணத்தை 14 பைசாவில் இருந்து 6 பைசவாக குறைத்துள்ளனர். ஜியோ சந்தைக்கு வந்த பிறகு இந்த கட்டணத்தை ட்ராய் குறைத்துள்ளது குறிப்பிடத்ககது. டெர்மினேஷன் கட்டணத்தை குறைத்ததால் ஏர்டெல் உட்பட மற்ற நிறுவனங்களுக்கு இன்கம்மிங் கால் மூலம் வந்த லாபம் குறைந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றது.

கடந்த காலண்டில் ஏர்டெல் நிறுவனத்திற்கு மட்டும் 652 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு காரணம் டெர்மினேசன் கட்டணம் குறைக்கப்பட்டு தான் என அதன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜிவோடு போட்டி போட முடியாமல் திண்டாடி வரும் மற்ற மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இந்த டெர்மினேசன் கட்டண குறைப்பு பெரும் திண்டாடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் வேறு வழியின்றி இந்த திடீர் மாற்றங்களை ஏர்டெல் வோடாபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றது. இந்த மாற்றத்தால் இந்த நிறுவனங்கள் கணிசமான வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என எதிர்பாக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் மாத மாதம் வழக்கம் போல் ரிஜார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.