Home வீடியோ (Video) ரஜினிக்கு தெரியாதா அல்லது தெரிந்தும் தெரியாததது மாறி நடிக்கிறாரா வேல்முருகன் பேட்டி

ரஜினிக்கு தெரியாதா அல்லது தெரிந்தும் தெரியாததது மாறி நடிக்கிறாரா வேல்முருகன் பேட்டி

நடிகர் ரஜினகாந்த் அவர்கள் எந்த 7 பேர் என நேற்ற இரவு கேட்ட கேள்வி சமூக வலைதளத்தில் தீயாய் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பத்திரிக்கையாளர்களை அவ்வப்போது சந்திக்காத ரஜனிகாந்த் இன்று காலை எழுந்தவுடன் முதல் வேலையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஒரே கேள்விக்கு 2 வது முறையாக விளக்கம் அளிக்கும் நிலையை நெட்டிசன்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் வேல்முருகன் அவர்கள் இது குறித்து கடலூரில் பேட்டி அளித்துள்ளார்.

“நான் 47 ஆண்டு காலம் பச்சை தமிழாக இருந்துள்ளேன் என்று கூறிய ரஜினிக்கு ஆளுனர், ஜனாதிபதி , உச்ச நீதிமன்றம் வரை சென்று ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்ட அந்த 7 பேர் குறித்து தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போன்று சினிமாவில் நடிப்பது போன்று நடிக்கின்றாரா

ரஜினிக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை இதை பார்த்து தமிழக மக்கள் தான் திருந்த வேண்டும். 7 பேரின் பிரச்சனை பற்றி தெரியாதவர் 7 கோடி பேரின் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வை தந்துவிடுவார் என வேல்முமுருகன் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

தமிழக பிரச்சனைகள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் போதெல்லாம் நான் இப்பொழுது தான் வெளிநாட்டிற்கு போய் நடித்து விட்டு வந்துள்ளேன், நான் இப்பொழுது தான் டப்பிங் பேசிவிட்டு வந்துள்ளான் நான் இப்பொழுது தான் விமானத்தை விட்டு இறங்கி வைத்துள்ளேன், நான் இப்போது தான் இமயமலைக்கு சென்று விட்டு வந்துள்ளேன் என எந்த பதிலும் கூறாத ரஜினிகாந்திற்கு தமிழக மக்களை ஆள்வதற்கான தார்மீக உரிமை உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.

இன்று காலை பேட்டி அளித்த ரஜினிகாந்த் வெறும் 7 பேர் என செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினார்கள். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் என கேட்கவில்லை அதனால் தான் நான் எந்த 7 பேர் என கேட்டேன் கேள்வி கேட்பவர்கள் தெளிவாக கேட்டிருக்க வேண்டும் என விளக்கம் அளித்துள்ளார்.