Home செய்திகள் (News Articles) போலி பேடிஎம் ஆப் மூலம் லட்சகணக்கில் மோசடி

போலி பேடிஎம் ஆப் மூலம் லட்சகணக்கில் மோசடி

தொழில் நுட்பம் ஒரு புறம் வளர அதை வைத்து மோசடி செய்வதும் நாளுக்கு நாள் பெறுகி வருகின்றது. போலியான பேடிஎம் ஆப் மூலம் லட்சகணக்கில் பொருட்களை வாங்கி மோசடி செய்த கல்லூரி மாணவர்களை சென்னை போலிசார் பிடித்துள்ளனர்.

மோசடியில் ஈடுபட்ட சென்னை அமிர்தா கல்லூரியில் படிக்கும் கர்நாடகத்தை சேர்ந்த 9 மாணவர்களை போலிசார் பிடித்து விசாரனை நடத்தியுள்ளனர்.

சென்னை துறைபாக்கம் குமரன் குடி பகுதியில் , சக்தி சீனாவசன் சாலையில் உள்ளது சரவணா ஷாப்பிங் மால். இங்கு கடந்த 3 மாதத்திற்கு முன்னர் பேடிஎம் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்து வைத்துள்ளார் கடை உரிமையாளர்.
இதை அறிமுகம் செய்ததும், அவரது கடைக்கு அருகே உள்ள சென்னை அமிர்தா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி வந்த பேடிஎம் ஆப் மூலம் பொருட்களை வாங்கி சென்றுள்ளனர்.

பொருட்களை வாங்கி விட்டு தங்களது மொபைலி-ல் உள்ள பேடிஎம் ஆப் மூலம் அவர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர். (உண்மையில் அவர்கள் பணத்தை செலுத்தவில்லை)

கடைக்காரர் பேடிஎம் ஆப்பில் பணத்தை செலுத்திய பிறகு அதை உறுதி செய்ய வரும் டிக் மார்க்கை பார்த்ததும் மாணவர்கள் பணம் செலுத்தி விட்டார்கள் என எண்ணி பொருட்களை வழங்கி வந்துள்ளார்.

கடந்த 3 மாதமாக இவ்வாறு மாணவர்கள் செய்து வந்துள்ளனர். ஒரு நாள் கடை உரிமையாளர் பேடிஎம் ஆப் மூலம் அன்றைய தினம் நடந்த விற்பனையை பரிசோதித்துள்ளார்.

அப்போது , 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளதாகவும் ஆனால் வங்கி கணக்கில் 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே வரவு வந்துள்ளதாகவும் கணக்கு காட்டியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் கடை உரிமையாளர்.

இதை தொடர்ந்து தினமும் இவ்வாறு பரிசோனை செய்த போது தான் தெரியவந்துள்ளது தினமும் இதே போன்று விற்பனையான தொகையை விட வரவு வந்த தொகை மிக குறைவாக இருந்துள்ளது.

அடிக்கடி வருவதால் மாணவர்கள் மீது சந்தேகப்பட்ட கடை உரிமை ஒரு நாள் மாணவர்களை பிடித்து அவர்களின் செல்போனை பரிசோதனை செய்துள்ளார். அதில் உள்ள பேடிஎம் ஆப் ஐ ஒபன் செய்து பார்த்த போது தான் அவருக்கு தெரியவந்துள்ளது, அது போ-லியான பேடிஎம் ஆப் என்று.

அந்த ஆப்பின் பெயர் “நல்ர்ர்ச் டஹஹ்ஹற்ம்“, இது பேடிஎம் போன்றே வடிவமைக்கப்பட்ட போ-லியான ஆப். பேடிஎம் ல் உள்ள அனைத்து குறியீடுகளும் இதில் இடம் பெற்றிருப்பதால் கடைகாரர் இதை உண்மை என நம்பி பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

பின்னர் தான் இது போலி-யான ஆப் என தெரியவந்துள்ளது.

கடை உரிமையாளர் சரவணன் வேல்ராஜ் இது குறித்து கூறுகையில்,

“கிட்ட தட்ட 27000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி போ-லி ஆப் மூலம் இந்த மாணவர்கள் எனது கடையில் மோசடி செய்துள்ளார்கள். 30 க்கு மேற்பட்ட கர்நாடகாவை சேர்ந்த மாணவர்கள் சென்னை மூலவதும் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு தேவையான பொருட்களை பணம் செலவழிக்காமல் இந்த போலி-யான ஆப் மூலம் வாங்கி செல்கின்றனர். ஒருவனை பிடித்து விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது. 30 பேரில் 9 பேர் தற்போது பிடிபட்டுள்ளனர்“.

எனத் தெரிவித்துள்ளார்.

நவீன தொழில் நுட்பங்கள் ஒரு புறம் வசதியை அளித்தாலும் இது போன்ற பாதிப்புகளையும் மக்கள் அதனால் சந்திக்க வேண்டியிருக்கின்றது.

இது போன்று மோசடி செய்வதற்கு அடிப்படை காரணம் பேடிஎம் ல் இருந்து வரும் நஙந தாமதமாக வருவதால் தான் என கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

பெரும்பாலான நேரங்களில் பேடிஎம் பணத்தை உறுதி செய்யும் நஙந கடை உரிமையாளருக்கு தாமதாக வருவதால் இவர்கள் போ-லியான ஆப்பை பயன்படுத்தும் போது அதை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கக் கூடும். இது தான் இந்த சம்பவத்திலும் நடைபெற்றுள்ளது. எனவே பணம் பறிமாற்றங்கள் செய்யும் ஆப் நிறுவனங்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இல்லை எனில் பொதுமக்களும் கடை உரிமையாளர்களும் பேடிஎம் போன்ற ஆப்களை புறக்கணிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

பேடிஎம் போன்ற ஆப்களை பயன்படுத்தும் கடை உரிமையாளருக்கு இந்த சம்பவம் ஒரு வழிப்புணர்வாக அமைந்துள்ளது. போலி-சாரின் முன்பே மாணவர்கள் தாங்கள் எவ்வாறு மோசடி செய்தோம் என்பதை விளக்கிக் காட்டி அங்கிருந்தவர்களை அதிர வைத்தனர். மாணவர்களின் மோசடி குறித்து கேள்விபட்டதும் மாணவர்கள் தங்கியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் கா-லி செய்யுமாறு கூறியுள்ளார். பிறகு இது போன்றவர்களை யார் தங்க வைத்துக் கொள்ள அனுமதிப்பார்கள்.