புதுக்கோட்டையில் டீ கடை நடத்தும் சிவகுமாருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
கஜா புயலால் பல விவசாய குடும்பங்கள் தங்களின் வாழ்யை இழந்து நிற்கின்றனர். இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள் என பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவிக் கரம் நீட்டி வருகின்றனர். மெல்ல மெல்ல தங்களின் இயல்பு நிலைக்கு விவசாயிகள் திரும்ப முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வரும் நிலையில், ”விவசாய கடனை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை ஆனால் என் கடையில் விவசாயிகள் வைத்த டீ கடனை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு உள்ளது இதை வைத்து சிறிய அளவில் அவர்களின் சுமையை குறைக்க முடியும்” என எண்ணிய சிவகுமார் கடந்த 5 ஆண்டகளாக தனது கடையில் அந்த பகுதி மக்கள் வைத்த டீ கடனை ரத்து செய்துள்ளார்.
கடன் வைத்தவர்கள் மீண்டும் வருவதற்கு சங்கடப்பட்டு விடுவார்களோ என நினைத்த சிவகுமார், இதை அறிவிப்பாக எழுதி அதை கடையில் மாட்டி தொங்க விட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே வம்பன் 4 ரோட்டில் கடந்த 5 ஆண்டுகளாக டீ கடை நடத்தி வருகி்றார் சிவகுமார்,
டீ கடனை ரத்து செய்த சிவகுமாரின் இந்த செயல் மட்டுமல்லாது இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியும் அனைவரையும் நெகிழ வைக்கின்றது.
”இந்த பகுதியில் இருப்பவர்கள் எல்லாம் அம்பானி அல்ல , எல்லோரும் விவசாயிகள் தான் அவங்க டீ குடிச்சு தான், நான் இது நாள் வரை சாப்பிட்டு வருகின்றேன். கஜா புயல் விவசாய நிலங்களை நாசம் செய்து விட்டது, இதனால் இங்கு உள்ளவர்கள் தற்போது வேலை இல்லாமல் அன்றாடம் கஷ்டப்படுகின்றனர். இதனால் 2 வாட்டி கடன் சொல்லி டீ குடித்தவர்கள் மீண்டும் கடன் சொல்லி டீ குடிக்க வேட்கப்பட்டு கொண்டு தன் மானத்திற்காக டீ குடிப்பதை தவிர்த்து கொள்கின்றனர்.
இது எனக்கு தெரியவந்தது. இதனால் தான் டீ கடனை தள்ளுபடி செய்து இந்த அறிவிப்பை நான் வெளியிட்டேன் என்னால் முடிந்ததை நான் செய்து விட்டேன் இனி அரசாங்கம் தான் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார் புதுக்கோட்டை டீ கடைகாரர் சிவகுமார்.
ஒரு வேலை இந்த டீ கடைகாரரிடம் அதிகாரம் இருந்திருந்தால் விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து அவர்களின் ஒட்டுமொத்த கடனையும் ரத்து செய்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை!
டீ கடையில் லட்சக்கணக்கிலான கடன் இருக்கப் போகின்றது சுமார் 15 ஆயிரம் அளவில் டீ குடித்தவர்கள் கடன் வைத்திருந்துள்ளார்கள் அதை சிவகுமார் தள்ளுபடி செய்துள்ளார். ஒரு கோடி ரூபாய் வைத்திருப்பர் ஆயிரம் ரூபாய் கொடுப்பது பெரிதல்ல. 1000 ரூபாய் வைத்திருப்பவர் 500 ரூபாய் கொடுப்பது தான் பெரிது.
டீ கடை நடத்துபவருக்கு 15 ஆயிரம் என்பது பெரிய தொகை தான். விவசாய மக்களுக்காக அதை ரத்து செய்த சிவகுமாரின். பெரிய மனதை சமூக வலைதளத்தில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.