Home செய்திகள் (News Articles) சினிமா பட பாணியில் ஆதார் தகவல்களை திருடி பணம் சம்பாதித்த ஆசாமி

சினிமா பட பாணியில் ஆதார் தகவல்களை திருடி பணம் சம்பாதித்த ஆசாமி

சமீபத்தில் வெளியான இரும்புதிரை படத்தை பார்த்த பலர் இதெல்லாம் எங்க நடக்கப் போகுது ஏதோ படத்துக்கு எடுத்துருக்காங்க என நினைத்திருப்பார்கள். காரணம் பலருக்கும் இது புதுசாக இருந்திருக்கும் இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கும்.

மேலும் ”ஆன்லைன் தககவல் திருட்டு” என்பது சம்பந்தப்பட்ட நபருக்கு (விக்டிம்) எல்லளவும் தெரியாமல் நடப்பதால் பலருக்கும் இப்படி ஒரு விசயம் நமக்கு பின்னால் நடக்கின்றது என்பது தெரியாமலே போய்விடுகின்றது.

இரும்புதிரை படத்தில் கூறப்பட்ட ஆன்லைன் தகவல் திருட்டு சம்பவத்தை போன்றே நிஜத்தில் பலே ஆசாமி ஒருவர் மோசடியில் ஈடுபட்டு நல்ல பணம் பார்த்து கடைசியில் போலி-சில் சிக்க் கொண்டுள்ளார்.

அவர் என்ன செய்தார் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.

சந்தோஷ், இவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் படப்பள்ளியை சேர்ந்த வோடாபோன் சிம்கார்டு விநியோகஸ்தர்.

ஒரு சிம்கார்டை விற்றால் இவருக்கு 15 ரூபாய் கமிஷன் அவரது நிறுவனம் வழங்குமாம்.

சிம்கார்டு விற்பனை குறைந்ததால் சந்தோஷ் பணம் சம்பாதிக்க குறுக்கு வழியில் இறங்கியுள்ளார்.

அதிக நபர்களுக்கு சிம் கார்டுகளை விற்றதாக கணக்கு காட்டி அதிக அளவில் பணம் சம்பாதித்துள்ளார். இதற்கு அவர் பயன்படுத்தியது பொதுமக்களின் கைரேகை மட்டுமே.

கிட்ட தட்ட முதற்கட்டமாக 6000 சிம் கார்டுகளை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலே eKYC mechanism மூலம் ஆக்டிவேட் செய்து பணம் சம்பாதித்துள்ளார்.

தற்போதேல்லாம் சிம் கார்டு வாங்குவதற்கு நமது அடையாள அட்டையை செல்போன் கடையில் கேட்பது இல்லை. மாறாகா ”உங்க கைரேகைய மட்டும் வைங்க சார் போதும் உங்க டேட்டா மொத்தமா எங்களுக்கு வந்துரும்” என்பார் செல்போன் கடைக்காரர்.

நாம் செல்போன் கடையில் நமது கைரேகையை வைத்த உடனேயே கடைக்காரருக்கு நமது புகைப்படம் முகவரி தொலைபேசி எண் உள்ளிட்ட நமது ஒட்டு மொத்த தகவல்கள் கிடைத்து விடும்.

அதை வைத்து அவர் 5 நிமிடத்தில் நமக்கு சிம் கார்டை அக்டிவேட் செய்து கொடுத்து விடுவார்.

இது நமக்கு ஒரு புறம் ஈசியான வழிமுறையாக தெரிந்தாலும் இதை வைத்து தான் சந்தோஷ் விளையாடியுள்ளார். இதற்கு பின்னால் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை அவர் பயன்படுத்தி பணம் சம்பாதித்துள்ளார்.

”சிம் கார்டு விற்பனை குறைந்து விட்டது. சிம்கார்டை அதிக நபர்களுக்கு விற்றது போன்று கணக்கு காட்ட பொதுமக்களின் கைரேகை வேண்டுமே என்ன செய்யலாம்” என யோசித்துள்ளார் சந்தோஷ்

பல வழிமுறைகளில் ஆதார் தகவல்களை திருட முற்பட்டுள்ளார். கடையிசியில் தெலுங்கானா மாநிலத்தில் பத்திரவு பதிவு இணையதத்தில் இருந்து பத்திரம் பதிவு செய்தவர்களின் கைரேகைகளை பதிவிறக்கம் செய்துள்ளார்.

தெலுங்கான மாநில பத்திர பதிவு இணையதளத்திற்கு சென்று ரெண்டமாக பதிவு எண்களை போட்டு பலரின் கைரேகையை டவுன்லோடு செய்து கொண்டுள்ளார்.

பின்னர் அந்த கைரேகளை மட்டும் போட்டோஷாப் மூலம் பெரிதாக்கி அதை பிரிண்ட் அடுத்து ரப்பர் ஸ்டாம் மூலம் பிரிண்ட் எடுத்த கைரேகைகளை பிளஸ்டிக் பேப்பரில் நகல் எடுத்து , ஒரு ஆள் கை ரேகை வைத்தால் என்ன தகவல் கிடைக்குமோ அதே போன்ற தரத்தில் அந்த பிளாஸ்டிக் பேப்பரில் கைரேகையை பதிய வைத்து. ஃபிங்கர் பிரிண்ட் ரீடரில் நிஜ கை ரேகையை வைப்பதற்கு பதிலாக டவுன்லோடு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பேப்பரில் தயாரிக்கப்பட்ட கைரேகையை வைத்து eKYC mechanism மூலம் அந்த கைரேகைக்கு சொந்தகாரர்களின் முழு ஆதார் விபரத்தையும் எடுத்து அவரது பெயரில் சிம்கார்டு விற்றது போன்று ஆக்டிவேட் செய்து சந்தோஷ் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஹைதராபாத் காவல்தறையினர் தெரிவித்து நம்மை அதிர வைத்துள்ளனர்.

இந்திய நாட்டில் உள்ள அனைவரின் ஆதார் தகவல்களும் UIDAI (Unique Identification Authority of India) என்ற ஆதார் தகவல் செமிக்கும் மையத்தால் பறாமரிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு சேமிக்கப்பட்ட நமது ஆதார் தகவல்களை eKYC மூலம் KYC User Agency (KUA) உரிமம் பெற்ற நிறுவனங்கள் வெறும் கைரேகை மூலம் நொடுடிப் பொழுதில் பெற்றுக் கொள்ளலாம். அதாவது அரசாங்க டேட்டாபேசில் இருக்கும் நமது ஆதார் தகவல்களை eKYC மூலம் தனியார் நிறுவனங்கள் ஒருவரின் கைரேகை மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு பல்வேறு விதிமுறைகள் கட்டுப்பாடுகள் உள்ளது.

தற்போதுள்ள எல்லா தொலைபேசி நிறுவனங்ககளும் இந்த KYC User Agency (KUA) உரிமத்தை பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்களை ”2 போட்டோ எடுத்துட்டுவா ஓட்டர் ஐடி கொண்டு வா அத கொண்டு வா” என கேட்பதற்கு பதிலாக வெறுமென ஃபிங்கர் பிரிண்ட் ரீடரில் கையை வைக்க சொல்லி- நமது ஆதார் தகவல்களை UIDAI (Unique Identification Authority of India) ல் இருந்து eKYC மூலம் நேரடியாக பெற்றுக் கொண்டு நமக்கு சிம் கார்டுகளை ஒரு சில நிமிடங்களில் வழங்கி வருகின்றனர்.
இந்த முறையை தான் சந்தோஷ் தவறாக பயன்படுத்தி பொதுமக்களின் கைரேகளை மட்டும் அரசு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அந்த கைரேகை மூலம் ஆதார் தகவல்களை பெற்று 6000 சிம் கார்டுகளை அந்த கைரேகைக்கு உரியவர்களுக்கு தெரியாமலே அவர்களின் பெயரில் அக்டிவேட் செய்து தொலைபேசி நிறுவனத்திடமிருந்து கமிஷ் மூலம் பணத் பார்த்துள்ளார் சந்தோஷ்

சந்தோஷ் பெரிய அளவில் படித்த இன்ஜினியர் இல்லை. பட்டப்படிப்பை பாதியில் விட்டவர் தான். இந்த தில்லு முல்லு வேலை அனைத்தும் ஆன்லைனில் Youtube வீடியோக்களை பார்த்து கற்றுக் கொண்டுள்ளார். ஒருவரின் கைரேகயை பிரிண்ட் எடுத்து அதை எப்படி நிஜ கைரேகை போன்று போ-லியாக தயாரிப்பது என்ற விபரங்கள் அனைத்தையும் ஆன்லையில் தேடியே சந்தோஷ கற்றுக் கொண்டுள்ளதாக போலிலிசார் கூறுகின்றனர்.

எப்படி சந்தோஷ் மாட்டினார்

சந்தோஷின் திருட்டுத்னத்தை கண்டு பிடித்த UIDAI அதிகாரி.

ஒரு கணிணியில் இருந்து வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் குறிப்பிட்ட கால அளவில் eKYC மூலம் தறவுகள் எடுக்கப்பட்டடதை அறிந்த ஹைதராபாத்ரதின் UIDAI மையத்தின் அதிகாரி எம்விஆர் ஆனந்த் அவர்கள் எஸ் ஆர் காவல் நிலையத்தில் சந்தோஷ் மீது புகார் அளித்துள்ளார். ஆதார் தகவல்களை தவறான முறையில் எடுத்து சிம்கார்டுகளை இவர் அக்டிவேட் செய்துள்ளார் என அதிகாரி எம்விஆர் ஆனந்த் அவர்கள் அளித்த புகாரில் சந்தோஷை ஹைதரபாத் போலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தோஷ் உண்மையை ஒத்துக் கொண்டு, தொலைபேசி நிறுனவத்திடமிருந்து கமிஷன் கிடைப்பதற்காகவே தான் இவ்வாறு செய்ததாக போலிசாரிடம் கூறியுள்ளார்.

மேலும் சிம் கார்டுக்கு பயன்படுத்திய கைரேகைகளை http://registration.telangana.gov.in என்ற தெலுங்கானா மாநில பத்திர பதிவு இணையதளத்தில் இருந்து எடுத்ததாகவும் சந்தோஷ் கூறியுள்ளார்.
பணிகளை எளிதாக்கவும் பல்வேறு காரணங்களுக்காகவும் பொதுமக்களின் கைரேகை உள்ளிட்டு மிக முக்கிய விபரங்களை தங்களது இணையதளங்களில் சேமித்து வைக்கும் போது அவைகள் மிகுந்த பாதுகாப்போடு இருக்க போதுமான நவீன பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் கையாள வேண்டும் என்பது பாதுகாப்பு வல்லுணர்களின் கருத்தாக உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களாகிய நாமும் தமது தகவல்களை பிறருக்கு அளிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகின்றது..

இல்லை எனில் இந்த சம்பவத்தில் நடந்தது போன்று, நமக்கு தெரியாமல் நமது பெயரில் ஒருவர் சிம் கார்டை வாங்கி அதை அவர் சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்தி அது கண்டுபிடிக்கப்படும் போது அந்த சிம் கார்டு யாரின் பெயரில் உள்ளதோ அவர் தான் முதலில் விசாரிக்கப்படுவார் எனவே பொதுமக்களாகிய நாமும் மிக ஜாக்கிரிதையாக இருப்பது அவசியம்.

ஆதார் கார்டை செல்போன் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் என்ற உத்தரவை இது போன்ற பல்வேறு காரணங்கள் குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அடுத்த தீர்ப்பு வரும் வரை தற்காலிக்கமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடதக்கது.