Home வீடியோ (Video) முதலமைச்சரை சந்தித்து கஜா புயல் நிவாரணத் தொகை வழங்கிய சரவணா ஸ்டோர்

முதலமைச்சரை சந்தித்து கஜா புயல் நிவாரணத் தொகை வழங்கிய சரவணா ஸ்டோர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு பல பெரும் நிறுவனங்கள் உதவி வரும் நிலையில் கோடி கோடியாய் செலவு செய்து விளம்பரம் எடுக்கும் சரவணா ஸ்டோர் இதுவரை ஒன்றும் செய்யவில்லையே என சமூக வலைதளத்தில் சிலர் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சரை இன்று நேரில் சந்தித்தார் தி லெஜண்ட் சரவணா ஸ்டோரின் தலைவர், தமிழ்நாடு வணிகர்கள் சங்க தலைவரும் அவருடன் வந்திருந்தார்.

அப்போது முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களிடம் கஜா புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் க்கான காசோலையை தி லெஜண்ட் சரவணா ஸ்டோரின் தலைவர் சரவணன் வழங்கினார்.

மேலும் ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

“டெல்டா விவசாயிகளுக்கு சிறியதே பெரியதோ நம்மால் ஆன உதவிகளை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டும். அவர்களின் வாழ்கையை அவர்களுக்கு மீட்டு கொடுக்க வேண்டும்” என அதில் அவர் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“மேலும் கஷ்டம் நஷ்டம் என்பது அனைவரின் வாழ்கையில் ஏற்படும் ஒன்று தான், எதுவும் நிரந்தரம் இல்லை மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டால் வாழ்கையில் வெற்றி பெற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம்” என நம்பிக்கையுட்டும் விதமாக தனது ஆறுதலையும் தி லெஜண்ட் சரவணா ஸ்டோரின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் தலைவர் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெரும் தொகையை அள்ளிக் கொடுத்து விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இதே போன்று இன்று முதலமைச்சரை சந்தித்த நடிகர் விவேக் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் பங்களிப்பாக 5 லட்சம் ரூபாய் வழங்கினார்.

எஸ் ஆர் எம் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை இயக்கி வரும் எஸ் ஆர் எம் யுனிவர்சிட்டியின் வேந்தர் பச்சமுத்து இன்று முதலமைச்சரை சந்தித்து ஒரு கோடி ரூபாய்கான காசோலையை வழங்கினார்.

இதே போன்று ராம்கோ நிறுவனத்தின் தலைவர் இன்று முதலமைச்சரை சந்தித்து கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு ஒரூ கோடி ரூபாய் வழங்கினார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் முதலமைச்சரை சந்தித்து கஜா புயல் நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் வழங்கியுள்ளார்

பொதுமக்களால் அரசிற்கு இது போன்று கோடி கோடியாய் வழங்கப்படும் நிவாரண தொகை பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு எந்த தடங்களும் இன்றி உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.