Home வீடியோ (Video) சேலம் ராஜலட்சுமி குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 5 லட்சம் அமைச்சர் நேரில் வழங்கினார்

சேலம் ராஜலட்சுமி குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 5 லட்சம் அமைச்சர் நேரில் வழங்கினார்

சர்கார் படத்தை பற்றி அமைச்சர்களுக்கு பேச நேரம் இருக்கின்றது சேலம் சிறுமி ராஜலட்சுமியை பற்றி பேச அமைச்சர்களுக்கு நேரமில்லையா என சீமான் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் உயர் கல்விதுறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

அமைச்சர் அன்பழகன் அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு நிதியுதவி வழங்கினார்.

முன்னதாக ஏற்கனவே அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட் குடும்பத்தை சந்தித்து குடும்பத்தாரின் மனுவை நேரடியாக பெற்றுக் கொண்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்தார்களை முதலமைச்சரிடம் அழைத்து சென்றார்.

அப்போது ராஜலட்சுமியின் பெற்றோர் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் அளித்தனர்.

குற்றவாளி தினேஷ் மனனோயாளி எனக் கூறி தப்பிக்க வைக்க முயற்சிப்பதாகவும் எக்காரணம் கொண்டும் அவனை தப்ப விடக் கூடாது என பெற்றோர்கள் சார்பில் மனுவில் கூறப்பட்டது.

மேலும் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் சகோதரி நர்சிங்க படித்திருப்பதால் அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் சிறுமியின் பெற்றோருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மனுவில் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.