Home வீடியோ (Video) சகாயத்திற்கு விருது கொடுத்த டெல்லி சத்தமில்லாமல் சாதனை படைத்த சகாயம் ஐஏஎஸ்

சகாயத்திற்கு விருது கொடுத்த டெல்லி சத்தமில்லாமல் சாதனை படைத்த சகாயம் ஐஏஎஸ்

இந்தியாவின் ஆகச் சிறந்த ஐஏஎஸ் அதிகாரி என்ற பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த சகாயம் அவர்கள். இதற்கான தேசிய அளிவலான விருது இன்றைக்கு டெல்லியில் சகாயம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று டெல்லி சென்ற சகாயம் அவர்கள் விருதை பெற்றுக் கொண்டார். அமைச்சர்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

சகாயம் அவர்களின் நேர்மையான நெஞ்சுரத்திற்கும், கணிம மாஃபியாக்களை அடையாளபடுத்தியதில் அச்சமின்றி துணிந்து செயலாற்றியதற்கும் இந்த விருது சகாயம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக விருதை வழங்ககும் ஜிஃபைல் அவார்ட்ஸ் தெரிவித்துள்ளது.

அரசியல் தலையீடுகளுக்கு அப்பாற்பட்டு உயர் பதவியில் இருந்த முன்னாள் அரசு அதிகாரிகளால் இந்த விருது தேர்வு செய்யப்பபட்டு வருடா வருடம் டெல்லியில் வழங்கப்பட்டு வருகின்றது. ஜி ஃபைல்ஸ் என்ற அரசு துறை அதிகாரிகள் சார்ந்த இதழ் இதை வழங்குகின்றது.

ஒரு மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றினார் சகாயம் அவர்கள், பின்னர் படிப்படியாக மாற்றப்பட்டு இன்றைக்கு அவர் எந்த துறையில் உள்ளார் என்பதே பலருக்கு தெரியாத அளவு உள்ளது.

”இங்கு இருப்பவர்கள் அவரை கண்டு கொள்ளவில்லை என்றால் என்ன டெல்லி வரை அவரது முக்கியத்துவத்தை அறிந்து வைத்துள்ளார்கள் என்பது உணர்த்தகின்றது சகாயம் அவர்களுக்கு கிடைத்த இந்த விருது” என பலர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விருது சகாயம் அவர்களுக்கு மேலும் பெரும் ஊக்கத்தை கொடுக்கும்.

ஜி ஃபைல்ஸ் அவார்ட்ஸ் என்பது வருடா வருடம் தேசிய அளவில் சிறந்த அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விருதாகும். அரசு துறை வட்டாரத்தில் இது மிகவும் உயர்வாக கருதப்படும் விருதாகவும்.

தமிழ்நாட்டிடை சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு அவரது நேர்மையால் இந்திய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதே போன்று ஆகச் சிறந்த அதிகாரி என்பதற்கு அடுத்த படியாக சிறந்த அதிகாரி என்ற பிரிவில் ரூபா ஐஏஸ் அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள சசிகலா விவாகரத்தில் இவர் பிரபலமானவர் என்பது குறிப்பிடதக்கது.