பேஸ்புக் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 50 மில்லி-யன் பேஸ்புக் யூசர்களின் தகவல்கள் ஹெக் செய்யப்பட்டு திருடப்பட்டுள்ளது. இதை பேஸ்புக் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த செய்தியை முடிந்த அளவு பேஸ்புக் நிறுவனம் அனைவருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த செய்தியை வெளியிட்ட பிரபல தி கார்டியன் என்ற இணையதளத்தை பேஸ்புக் நிறுவனம் “ஸ்பேம்“ என அறிவித்து முடக்கியதாக தி கார்டியன் குறிப்பிட்டுள்ளது. பின்னர் இதற்காக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கேட்டதாகவும் தி கார்டியன் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்த ஹெக் நடந்துள்ளதை அறிந்ததாக பேஸ்புக் நிறுவனம் தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த பேஸ்புக் ஹேக் மூலம் 50 மில்-லியன் பேஸ்புக் யூசர்களின் ப்ரைவேட் மெஸ்ஸேஜ் உள்ளிட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 2 வாரங்களில் பேஸ்புக்கின் ஸ்டாக் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 217 டாலராக இருந்து பேஸ்புக் நிறுவனத்தின் ஸ்டாக் தற்போது 154 டாலராக சரிந்துள்ளது.
தற்போது பேஸ்புக்கில் விவ் அஸ் (View As) ஆப்ஷன் பலருக்கு நீக்கப்பட்டிருக்கும். பேஸ்புக் இந்த ஆப்சனை இந்த மாதம் நீக்கியுள்ளது. இதற்கும் இந்த ஹேக்கிற்கும் உள்ள தொடர்பை இந்த செய்தியின் இறுதியில் பார்ப்போம்.
நீங்களும் அந்த ஹேக் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட 50 மில்-லியன் நபர்களில் ஒருவரா என அறிந்து கொள்ள பேஸ்புக் இணையதளம் ஒரு பரிசோதனை இணைப்பு ஒன்றையும் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்த பேஸ்புக் அனா-லிட்டிகா பிரச்சனை குறித்து அனைவரும் கேள்வி பட்டிருப்போம். பேஸ்புக்கை பயன்படுத்துவோரின் அந்தரங்கம் அதாவது ப்ரைவசி தகவல்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து அது தவறாக பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் பேஸ்புக் நிறுவனம் பல சட்ட பிரச்சனைகளை சந்தித்தது.

“நாங்கள் தவறு செய்து விட்டோம் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் மன்னித்து விடுங்கள்“ என பேஸ்புக் நிறுவனத்தின் சியிஓ மார்க் அமெரிக்க செனட் சபை விசாரனை முன்பு தெரிவித்தார். இனிமேல் நடந்தால் யாரின் தகவல் திருடப்பட்டதோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் பேஸ்புக் அபராதம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டது.
அனா-லிட்டிகா பிரச்சனையை பொறுத்தவரை அது திருடப்பட்டு எடுக்கப்பட்டது அல்ல நம் தகவல்கள் தானாக தாரை வார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது பேஸ்புக்கில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை வைத்து ஆங்கிலத்தில் இதை பக் என்பார்கள். இந்த பக்கை வைத்து 50 மில்லியன் பேஸ்புக் யூசர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது.
யாரெல்லாம் இந்த ஹேக் மூலம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு மட்டும் பேஸ்புக் நிறுவனம் அவர்கள் பேஸ்புக்கில் லாகின் செய்யும் போது பிரத்யேக செய்தி ஒன்றை காண்பித்து அவர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து வருகிறது.
உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக என்பதை இந்த பேஸ்புக் இணைப்பிற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் லாக் அவுட் செய்து லாகின் செய்தும் உங்கள் கணக்கு பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹேக் எப்படி நடந்தது:
பேஸ்புக்கில் விவ் அஸ் (View As) என்ற ஒரு ஆப்ஷன் இடம் பெற்றிருக்கும். அதாவது மற்றவர்கள் நம் பேஸ்புக் வாலை பார்க்கும் போது அவர்களுக்கு எப்படி தெரியும் என நாம் பார்க்கும் வசதி. அந்த ஆப்ஷன் மூலமே ஹேக்கர்கள் 50 மில்லி-யன் பேஸ்புக் கணக்கின் ஆக்சசை பெற்று தகல்கவல்களை திருடியுள்ளனர்.
இந்த விளக்கத்தை பேஸ்புக் நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
நமது பேஸ்புக் கணக்கின் ஆச்சசை ஒருவர் இரண்டு வழியில் பெற முடியும். ஒன்று பாஸ்வேடை உள்ளீடு செய்து பெறலாம். அதே போன்று ஆக்சஸ் டோகன் எனக் கூறப்படும் அனுமதி சீட்டின் மூலமும் ஒருவர் நமது பேஸ்புக் கணக்கின் ஆச்சசை பெற முடியும்.
எதாவது ஒரு இணையதளத்தில் நாம் கணக்கு துவக்க போனால் உங்கள் பேஸ்புக் கணக்கு மூலமே இந்த இணையதளத்திலும் கணக்கு துவக்கலாம் என்ற ஆப்ஷன் வைத்திருப்பார்கள்.
நாமும் “வசதியா போச்சே இமெயில் ஐடி பேயர் பிறந்த தேதி ஊர் பேருல்லாம் டைப்ப பன்ன வேண்டியதில்லை“ என அதில் நமது பேஸ்புக் கணக்கு விபரங்களை கொடுத்து உள்ளே செல்வோம்.
நாம் உள்ளே சென்றதும் நமது பெயர் உள்ளிட்ட விபரங்கள் அந்த புதிய இணைதளத்தில் இடம் பெறும்.
இப்போது இந்த இணைதளம் நமது அக்கோண்டை ஆக்சஸ் செய்ய அந்த இணையதளத்திற்கு பேஸ்புக் ஒரு ஆக்சஸ் டோக்கனை (நமது அனுமதியுடன்) உருவாக்கிக் கொடுக்கும். அந்த இணையதளம் நமது அக்கோண்டின் தகவல்களை அந்த அக்சஸ் டோக்கன் மூலம் எடுத்து தங்களது இணையதளத்தில் காண்பிக்கும்.
ஃபேஸ்புக் ஆக்சஸ் டோக்கன்
அந்த ஆக்சஸ் டோன் என்பதும் பாஸ்வேடு போன்றது தான் ஆனால் அது மீக நீண்டு எழுத்துக்களாக இருக்கும்.
ஒரு வாரம் ஒரு மாதம் என அந்த ஆக்சஸ் டோக்கனுக்க கால அவகாசம் இருக்கும் அதற்கு மேல் அந்த ஆக்சஸ் டோக்கன் வேலை செய்யாது. அதன் மூலம் பின்னர் நமது கணக்கை ஆக்சஸ் செய்ய முடியாது. அது காலாவதி ஆகி விடும்.

சரி விசயத்திற்கு வருவோம். பேஸ்புக்கில் உள்ள ஒரு பக்கை கண்டுபிடித்து அதாவது பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடித்து 50 மில்லி-யன் பேஸ்புக் யூசர் அக்கோண்டின் ஆக்சஸ் டோக்கனை பெற்று அவர்களின் தகவல்களை இந்த ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.
ஒரு பக்கம் எஃபிஐ மற்றொரு பக்கம் பேஸ்புக் என ஹேக் செய்தவர்கள் யார் அவர்கள் இந்த தகவலை வைத்து என்ன செய்யப் போகின்றார்கள் என விசாரனை நடத்தி வருகின்றார்கள். இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்பவில்லை.
இந்த ஹேக் நடந்தது தங்களுக்கு தெரிந்த உடன் அந்த 50 மில்லி-யன் ஆக்சஸ் டோக்கனையும் தாங்கள் காலவதியாக்கிவிட்டதாக அதாவது ண்ய்ஸ்ஹப்ண்க் செய்து விட்டதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
திருடப்பட்ட நமது அந்தரங்க பேஸ்புக் மெஸ்ஸேஜுகள் வெளியே வந்தால் என்ன ஆகுமோ தெரியலயே என பல மில்லி-யன் பேஸ்புக் யூசர்கள் பதறி போயுள்ளனர்.
நமக்கு தெரியாமல் நம்மை கண்காணிக்கும் ஃபேஸ்புக்
பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் ஒட்டுமொத்த அந்தரங்கமும் பேஸ்புக்கிற்கு தெரியும். நம்மை பற்றி நம் வீட்டிற்கே தெரியாத சமாச்சாரங்கள் கூட பேஸ்புக்கிற்கு தெரியும். நம்ம பேஸ்புக்ல பன்றத யாரு பாக்க போறா என நினைத்து நாம் செய்யும் விசயங்கள் பிற்காலத்தில் நமக்கே பெரிய ஆபத்தாக மாறும் நிலை இது போன்ற பிரச்சனைகளால் ஏற்படும்.
அது எப்படி பேஸ்புக்கிற்கு நம்மை பற்றி தெரியும் அவர்கள் என்ன நம்மை ஆள் வைத்தா கண்காணிக்கின்றார்கள் என சிலர் நினைக்கலாம். நீங்கள் விரும்பும் விசயங்கள், மற்றவர்களுடன் நீங்கள் பேசிய பொருட்கள் குறித்த விளம்பரங்கள் உங்கள் பேஸ்புக் வா-லில் வருவதை நீங்கள் கவனித்துள்ளீர்களா?
இதுவெல்லாம் எப்படி நடக்கின்றது. உங்களின் சிரிய அசைவையும் பேஸ்புக் கண்காணிக்கும். நீங்கள் பேஸ்புக்கை விட்டு லாக் அவுட் செய்து விட்டாலும் அதன் பின்னரும் நீங்கள் செய்யும் சமாச்சாரங்களையும் பேஸ்புக் “ப்ரைவ்சர் குகீஸ்“ மூலம் கண்காணிக்கும். இதை பேஸ்புக் சியிஓ மார்கே அமெரிக்காவின் செனட் விசாரனை சபை முன்பு ஒத்துக் கொண்டுள்ளார்.
இன்டர்நெட்டிற்குள் சென்று விட்டாலே நமக்கு தெரியாமல் நாம் கண்காணிக்கப்டுகின்றோம் என்பது பலருக்கு தெரியாமல் உள்ளது. நாம் பயன்படுத்தும் ஆப், நாம் பயன்படுத்தும் செல்போன் நாம் பயன்டுத்தும் ப்ரவ்சர் மூலம் நாம் செய்யும் அத்தனையும் கண்காணிக்கப்படுகின்றது.
அந்த தகவல்கள் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் அதன் பாதிப்பை நாம் உணர்வதில்லை.
ஃபேஸ்புக் ஹேக்கால் நமக்கு என்ன பாதிப்பு?:
இது போன்று நம் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு அது தவறானவர்கள் கையில் கிடைக்கும் பட்சத்தில் அதன் விபரீதங்கள் பெரிய அளவில் இருக்கும்.
உதாரணமாக நாம் எதாவது ஒரு காரணத்திற்காக கிரெட் கார்டு தகவலை பேஸ்புக்கில் கொடுத்திருந்தால் நமது பணம் பறிபோக நேரிடும்.
வங்கியின் கஸ்டமர் கேருக்கு நீங்கள் போன் செய்தால் நீங்கள் பிறந்த இடம் உங்கள் பிறந்த தேதியை கேட்பார்கள் போன் செய்துள்ளது உண்மையில் இந்த கணக்கிற்குரியவர் தானா என்பதை உறுதி செய்ய.

உறுதி செய்த பின் வங்கி கணக்கில் நாம் சொல்லும் மாற்றங்களை செய்வார்கள். நாம் கேட்கும் தகவல்களை தருவார்கள்.
தற்போது வங்கி கேட்கும் இது போன்ற தகவல்களை நாம் அனைவருமே பேஸ்புக்கில் கொடுத்திருப்போம்.
இந்த தகவல்கள் தவறானவர்களின் கையில் கிடைத்து விட்டால் என்ன ஆகும் ? அவர்கள் எளிதில் நம்மை போன்று வங்கியை தொடர்பு கொண்டு நமது கணக்கு விபரங்களை பெறலாம் மாற்றலாம்.
முடிந்த அளவு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நம்மை பற்றிய அந்தரங்க தகவல்கள் அதாவது ஆங்கிலத்தல் பிரைவசி இன்ஃபர்மேஷன் என்பார்கள். இதை கொடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பொது வெளியில் எதை நாம் செய்ய மாட்டோமோ அதை செய்வதை பேஸ்புக்கிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
விபிஎன் எனச் சொல்லப்படும் “ப்ரைவேட் நெட் வொர்க்” போன்றவற்றை பயன்படுத்தினால் நம் அந்தரங்க தகவல்கள் கண்காணிக்கப்படுவதை ஓரளவு தவிர்க்கலாம்.
பொதுமக்களின் தகவலை வைத்து சம்பாதிக்கும் பேஸ்புக் தலையில் தற்போது ஹேக்கிங் பிரச்சனையால் பெரிய இடி விழுந்துள்ளது.
