Home வீடியோ (Video) 2 நாளில் மாறிய கணிப்பு , வர்தாவை போன்று கஜா புயல் பாதிப்புகளை ஏற்படுத்துமா ரமணன்...

2 நாளில் மாறிய கணிப்பு , வர்தாவை போன்று கஜா புயல் பாதிப்புகளை ஏற்படுத்துமா ரமணன் விளக்கம்

வானிலை ஆய்வு மையத்தால் சமீபத்தில் ரெட் அலர்ட் விடப்பட்டது, பின்னர் வானில ஆய்வு மையம் சொன்னது போன்று எதுவும் நடவடிக்கை வில்லை என்பதால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

தற்போது கஜா புயல் சென்னை மற்றும் நாகப்பட்டினம் இடையே வரும் 15 ஆம் தேதி காலை 8.30 முதல் 11.30 மணிக்குள் கரையை கடக்கவுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தானே, வர்தா புயலை போன்று கடுமையான பாதிப்புகளை இந்த கஜா புயல் ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதில் அளித்த முன்னால் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன்,

எல்லாம் கணிப்பு தான், கஜால் புயல் தீவிர புயலாக உருவெடுத்தி கரையை கடக்கும் போது சற்று குறைந்து புயலாக கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வர்தா தானே போன்று ”அதி தீவிர” புயல் என்று கூறப்படவில்லை. எனவே வர்தா தானே போன்று பாதிப்புகள் இருக்காது என கணிக்கப்படுகின்றது என விளக்கம் அளித்துள்ளார்.

கஜா புயலின் திசை சற்று தற்போது மாறியுள்ளதால் சென்னைக்கு அதன் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் கடலூர் மாவட்டத்தில் அதன் முழு பாதிப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் ரமணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

”தற்போது உள்ள கணிப்பின் படி 14 ஆம் தேதி நள்ளிரவு அல்லது 15 ஆம் தேதி காலையில் இருந்து மழை பொழிய ஆரம்பித்துவிடும்.

அந்த நாட்களில் பொதுமக்கள் மரங்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் புயல் காற்று வீசும் பட்சத்தில் மரங்கள் இடிந்து விழ வாய்ப்புள்ளது” எனவும் ரமணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வர்தா புயலை போன்று அல்லாமல் இந்த கஜா புயலால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 15 ஆம் தேதி அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுவை-காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் 80 ல் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் சென்னையில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட நிலையில் தற்போது திசை மாறியுள்ளதால் அந்த அளவு பாதிப்பு இருக்காது என கணக்கிடப்பட்டுள்ளது.

”எல்லாம் கணிப்பு தான் புயலில் என்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதை எதையும் வரையறுத்து கூற முடியாது” ரமணன் அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

தமிழக அரசு முன்னனெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. முதலமைச்சர் தலைமையில் இதற்கான அவசர ஆலோசனைகள் நடைபெற்று முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.