Home வீடியோ (Video) அடுத்த 24 மணி நேரத்தில் வருகின்றது வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

அடுத்த 24 மணி நேரத்தில் வருகின்றது வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் இருந்து இரண்டு தினங்களுக்கு கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் இன்று மதியம் பேட்டி அளித்துள்ளார்.

தற்போது உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் வழுப் பெற்று தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதியில் நிலை கொள்ளும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் 19 ஆம் தேதி அதாவது நாளை கடலோர மாட்டங்களில் மழை பெய்ய துவங்கி அடுத்த இரண்டு நாட்களில் அதாவது 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

19 ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் மிதமான மழை முதல் ஓரு சில இடங்களில் மிக கன மழை வரை பெய்யக் கூடும் எனவும், 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வட தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் எனவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனர்வகள் 18 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கும், 19 ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் , 20 ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதிக்கும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே நேரத்தில் இந்த காற்றுழுத்த தாழ்வு பகுதி தற்போது உள்ள கணிப்பின் படி புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.