Home தமிழ்நாடு (Tamil Nadu) வாரிசு அரசியலை எதிர்த்த விஜயகாந்த் மனைவிக்கு பொருளாளர் பதவி கொடுப்பதா

வாரிசு அரசியலை எதிர்த்த விஜயகாந்த் மனைவிக்கு பொருளாளர் பதவி கொடுப்பதா

தேமுதிக கட்சியின் பொருளாளராக விஜயகாந்த் அவர்களின் மனைவி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா அவர்களை கட்சியின் பொருளாராக அறிவித்தார்.

இந்த கூட்டத்தில் தேமுதிக கட்சியின் மாவட்ட செயலார்கள் கலந்து கொண்டனர். பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

“கேப்டன் இன்று உயர்மட்ட குழு கூட்டத்திற்கு அனைவரையும் அழைத்தார். ஆனால் அவர் கூட்டத்தில் அறிவிக்கும் வரை எனக்கு பொருளாளர் பதவியை அவர் கொடுக்கப் போகின்றார் என்பது எனக்கு தெரியாது.

இருவரும் ஒன்றாக தான் வந்தோம் ஆனால் அவர் இந்த முடிவை எடுத்தது எனக்கே தெரியாது. அவர் அறிவிக்கும் போது தான் எனக்கு தெரிந்தது. 14 ஆண்டு காலம் கட்சியின் உறுப்பினராக இருந்த எனக்கு தற்போது கேப்டன் பொருளாளர் பதவியை கொடுத்துள்ளார்.

கடினமாக உழைத்தால் தான் கேப்டனிடம் பாராட்டையும் பொறுப்பையும் பெற முடியும்.
சாதாரண தொண்டனுக்கும் கேப்டன் உயர்ந்த பொறுப்பை கொடுப்பார். இந்த கட்சியில் உண்மை உழைப்பு இருந்தால் தான் உயர்வு கிடைக்கும்.

எனக்கு இந்த பதவியை கொடுத்தற்கு கேப்டனுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.“

இவ்வாறு விஜயகாந்த் மனைவி பிரேமலதா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

பொருளாளராக வந்து என்ன செய்யப் போகின்றீர்கள்? என செய்தியாளர்கள் கேட்டதற்கு கட்சியின் நிதி நிலையை மட்டுமல்ல எங்களை நம்பியுள்ள தமிழக மக்களின் நிதி நிலையையும் உயர்த்துவோம் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா தெரிவித்தார்.

இடையில் குறிக்கிட்ட செய்தியாளர், “விஜயகாந்த் அவர்கள் வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்தாரே குடும்ப உறுப்பினர்கள் கட்சிக்குள் வருவதை எதிர்த்து வந்துள்ளாரே. ஆனால் தற்போது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேமுதிகவில் பொறுப்பு கொடுக்கப்டப்டுள்ளதே?“ எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா , “விஜயகாந்த் அப்படி எங்கும் கூறியதாக எனக்கு தெரியவில்லை. நீங்கள் தான் சொல்கின்றீர்கள். யார் உண்மையாக உழைத்தாலும் கட்சியின் பொறுப்பிற்கு வரலாம். நான் 14 ஆண்டு காலம் உறுப்பினராக தான் இருந்தேன். 14 ஆண்டு கழித்து தற்போது தான் நான் பொறுப்பிற்கு வந்தள்ளேன்.

ஒரு குடும்பத்தில் இருந்த ஒருவர் கட்சிக்கு வருதை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை அந்த கட்சியின் உறுப்பினர்கள் தான் முடியும் செய்வார்கள். தொண்டர்கள் என்னை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம்“ எங்களுக்கு இல்லை எனக் கூறினார்.