Home வீடியோ (Video) பிஸ்கட் கவர்களை கம்பேனிகளுக்கே திரும்பி அனுப்பிய மாணவர்கள்

பிஸ்கட் கவர்களை கம்பேனிகளுக்கே திரும்பி அனுப்பிய மாணவர்கள்

தூத்துக்குடி மாணவ மாணவியர்களின் நூதமான செயல் குழந்தைகள் விரும்பும் பிஸ்கட் சாக்லெட் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் பிரபல நிறுவனங்களை சிந்திக்க வைத்துள்ளது.

பொதுவாக ஏதாவது பரிசு பொருட்களுக்காக பிஸ்கட் சாக்லெட் உள்ளிட்ட பொருட்களின் கவர்களை குழந்தைகள் திரட்டுவார்கள் ஆனால் தூத்துக்குடியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 1.5 லட்சம் பிஸ்கட். சாக்லெட் , சிப்ஸ் பாக்கெட் உள்ளிட்ட பொருட்களின் கவர்களை திரட்டி அதை கொரியரில் பார்சல் செய்து அதை தயாரித்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

அந்த கொரியுடன் சேர்த்து மாணர்கள் ஒரு கடிதத்தையும் அனுப்பி வைத்தனர்.

”மேனேஜர் அங்கில் , நீங்க தயாரிக்கும் பொருட்கள் நல்லா தான் இருக்கு, ஆனால் அந்த பொருட்களை பேக் செய்வதற்கு ப்ளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகின்றீர்கள் இதனால் குழந்தைகள் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு எங்கள் பகுதியில் சுற்று சூழலும் பாதிக்கப்படுகின்றது. அதான் நீங்க தயாரித்த ப்ளாஸ்டிக்க உங்களுக்கே அனுப்பிட்டோம் நீங்களே வைச்சுக்கோங்க”

என மாணவர்கள் அந்த கடிதத்தில் எழுதியுள்ளனர்.

மேலும், இனிமேலாவது எங்களை போன்ற குழந்தைகளுக்கும் சுற்று சூழலுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் குழந்தைகள் உண்ணும் பொருட்களை பேக் செய்யுங்கள் என அந்த கடிதத்தில் பிரபல நிறுவனங்களுக்கு தூத்துக்குடி மாணவர்கள் புத்தி சொல்லியுள்ளனர்.

வருகின்ற ஜனவரி மாதம் 1 ஆம் தேதியிலிருந்து தமிழக அரசு அனைத்து விதமான ப்ளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது. இதில் ஒரு சில விதி விலக்குகளும் உண்டு.

ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் நமது பகுதியின் சுற்று சூழலுக்கு மட்டுமல்லாது நமது உடலுக்கும் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றது.

பல்வேறு கேமிக்கலின் கலவை தான் ப்ளாஸ்டிக் , உணவு பொருட்கள் அதன் மூலம் பேக் செய்யப்படும் போது அந்த கேமிக்கல்கள் உணவு பொருளில் கலந்து அதன் மூலம் அந்த கெமிக்கல்கள் நமது உடலுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்கள் வர வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

ப்ளாஸ்டிக் பொருட்களை 7 வகையாக பிரிக்கின்றனர். இதில் , 2 , 4 மற்றும் 5 ஆம் குறியீடு உள்ள ப்ளாஸ்டிக்கால் குறைந்த அளவு பாதிப்பு இருப்பதாகவும் மற்ற எண் குறியீடு உள்ள பிளாஸ்டிக் பொருட்களால் மிகவும் ஆபத்து இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.

ப்ளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் பட்சத்தில் இந்த குறியீடுகளை கவனித்து பொதுமக்கள் அதை கையாளுவது நமது உடலுக்கும் சுற்று சூழலுக்கும் பாதுகாப்பாகும்.

குறிப்பாக குழுந்தைகள் பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் விளையாட்டு பொருட்களில் பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.