Home செய்திகள் (News Articles) காசாகும் நம் அந்தரங்கம் தகவல் திரட்டிகள் ஓர் ரிபோர்ட்

காசாகும் நம் அந்தரங்கம் தகவல் திரட்டிகள் ஓர் ரிபோர்ட்

இன்றைக்கு உலக பணக்காரர்கள் பட்டிய-லில் முதல் இடத்தில் இருக்கும் நிறுவனங்கள் தங்கமோ, வைரமோ, வைடூரியமோ விற்பவை கிடையாது. கூகிள், பேஸ்புக், டிவிட்டர், போன்ற இலவச சேவை அளிக்கிறோம் என்ற பெயரில் நமது தகவல் திரட்டு (திருடு) பவர்களும் குறைந்த விலையில் விற்பதாக கூறும் அமேசான் போன்றவர்களும். தான். If you are not paying for a product then you are the product,, அதாவது நீங்கள் விற்பனைப் பொருளை காசு கொடுத்து வாங்க வில்லை என்றால், நீங்கள் தான் விற்பனைப் பொருள் என்பது தான் இன்றைய நியதி. nformation is wealth அதாவது தகவல்கள் தான் சொத்து என்பது இன்றைய உலகின் வியாபார யுக்தி. இந்த தகவல் திரட்டு (திருட்டு) நிறுவங்களின் மதிப்பு கோடான கொடிகள்.

உன் நண்பனைச் சொல் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பார்கள், அந்தக்காலம் மலை ஏறிப்போய் தற்போது உன் தொலைபேசி ஆப்புகளைச் சொல் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்றாகி விட்டது. சொல்லும் செயலும் எண்ணத்தின் வெளிப்பாடு என்பது போய் கிளிக்கும் (ஈப்ண்ஸ்ரீந்) டாப்பும் (பஹல்) எண்ணத்தின் வெளிப்பாடாய் மாறி பாடாய் படுத்திக்கொன்றிருக்கிறது இன்றைய ஆன்லைன் உலகை.

நாம் செய்யும் ஒவ்வொன்றையும் எப்படி நோட்டம் விடலாம் என்பதையே குறிக்கோளாய் கொண்டிருப்பதில் உலகளாவிய உளவுத்துறைகளைத் தாண்டிவிடும் போல இந்த நவீன நவயுக வியாபார நிறுவனங்கள். நீங்கள் உங்கள் தொலைபேசியில் ஏதாவது பொருளைத் தேடினால், அதனைப்பற்றிய விளம்பரம் உங்களது கம்ப்யூட்டரில் வருவது பற்றி பலமுறை யோசித்திருப்பீர்கள். இது நமக்கு வசதியாக கருதினாலும் சில நேரங்களில் இதன் விளைவைப் பற்றி யோசித்து பயந்தவர்களும் உண்டு.

நம்மைப்பற்றி நம்மை விட இந்த தகவல் திரட்டி இயந்திரங்களுக்கு தான் தெரியும். நம்மைப் பற்றி என்னென்ன தகவல்கள் எப்படி எங்கே திரட்டுவது என்பதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது.

இதற்க்காக பல மனோத்தத்துவ ஆராய்ச்சிகள் உலகளவில் பெரிய பெரிய பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இது கோடிகள் புரளும் வியாபாரம் என்பதால் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது என்பதை சொல்ல வேண்டியது இல்லை.

இன்றைய டிஜிட்டல் உலகில், தொலைக்காட்சியில் ஒரு நடிகை அல்லது நடிகரால் விளம்பரப்படுத்தப்படும் பொருளைப்பார்த்து, தொலை பேசியில் இணையத்தில் பொருள் வாங்கும் காலம் இது.

இந்த டிஜிட்டல் உலகத்தில் சரியான தகவல்கள் கிடைத்தால் மற்ற நபர் போல் அடுத்தவர் ஆகிவிடும் காலம் இது. இந்த டிஜிட்டல் உலகில் நமது தகவல்களின் பாதுகாப்பு என்பது நமது உடை போன்றதாகும். ஆளாளப்பட்ட பெருந்தலைகளே டிவிட்டரில் சவால் விட்டு சங்கடப்பட்டதை சொல்லத்தேவை இல்லை. ஆதார் என்னை வெளியில் சொன்னால் பேபால், அமேசான், கூகிள் கணக்கு திறந்து அந்த நபராகவேய டிஜிட்டல் உலகில் உலா வந்துவிடலாம் என்ற நிலை கூட உருவாகலாம்.

இந்த தகவல் திரட்டி நிறுவனங்கள் நமது தகவல்களை பாதுகாப்பாக வைத்துள்ளதாக சொன்னாலும், பணத்திற்காக விற்றதை நாம் அறிவோம். பேஸ்புக், கேம்பிரிட்ஜ் நிறுவனத்திற்கு தனது பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து அனுமதி அளித்தததால் அமெரிக்க தேர்தலி-ல் அந்த தகவல் பயன்படுத்தப்பட்டு, அந்த மக்களை மனமாற்றம் செய்ய பொய் செய்திகள் பயன்படுத்தப்பட்டு, அதனால் தேர்தல் முடிவில் மாற்றம் வந்ததாகவும் அமெரிக்க பாராளுமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்கிடம் விசாரணை கூட நடந்தது. தற்போது உலக நாடுகளில் சில விழித்திக்கொண்டுள்ளது, முக்கியமாக ஐரோப்பாவில் இந்த தகவல் திரட்டு (திருட்டு) நிறுவங்களுக்கு சில விதிமுறைகள் அமுல் படுத்தப்பட்டுள்ளது, இதனால் பேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்களின் வருமானம் பாதித்துள்ளது. கடந்த மாதம் பேஸ்புக் ஒரே நாளில் 100 பில்லியன் டாலர் (ஏழாயிரம் கோடி ரூபாய்), அதாவது 25 சதவிகிதம் பங்கு சந்தையில் மதிப்பிழந்தது. டிவிட்டரின் கதியும் அதே தான் (25% மதிப்பிழந்தது).

இன்றைய உலகில் டிஜிட்டல் யுகத்தில் தகவல் பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியம், நமது தகவல்கள் தவறான கைகளில் சென்று விட்டால் அல்லது தவறான நோக்கம் உள்ளவர்களின் கையில் கிடைத்தால் நம்மையே அது ஆள பயன்படுத்தப்படும். இன்றைய புழு வேல், மோமோ சேலஞ்சு போன்றவற்றால் உயிர் இழந்தவர்களின் செய்திகள் நாமறிந்ததே. இதில் மிகவும் பயப்பட வேண்டிய விஷயம் என்பது தற்போது நடந்து முடிவதெல்லாம் முடிவல்ல, இதுதான் ஆரம்பம். இந்தியாவில் இது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் இவைகளை ஒழுங்குப்படுத்த மேற்கத்திய நாடுகள் போன்று விதிமுறைகள் வகுக்கப்படுவதாக தெரியவில்லை. நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.