மாதச்சம்பளம் வாங்குபவர்களுக்கும், குறு சிறு தொழில் நிறுவங்களின் தொழிலாளிகள் மற்றும் முதலாளிகளின் முக்கிய அன்றாட கவலை விலைவாசி. கடைக்குப் போய் காய்கறி வாங்கும் தாய்மார்களின் கவலை கூட இன்று தக்காளி வெங்காயம் விலை கூடிவிடக்கூடாதே என்பது தான். இந்த விலை வாசியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பெட்ரோல் மற்றும் டீசல் (போன்ற எண்ணெய்) விலை.
தற்போது எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதுவும் கடந்த இரு வாரமாக ஒரு ஸ்திரத்தன்மை இல்லாமல் கச்சா எண்ணெய் விலை மாற்றம் காணப்படுகிறது. இதற்க்கு பல சர்வதேச அரசியல் பொருளாதார காரணங்கள் உண்டு. ஆம் நாம் வாங்கும் நமது மண்ணில் விளையும் தக்காளி வெங்காயத்தின் விலை சர்வதேச அரசியலால் நிர்ணயிக்கப்படுவது என்பது சிலருக்கு வேடிக்கையாக இருந்தாலும், அது விந்தையான உண்மை.
இந்தியாவிலும் பெட்ரோல் விலை விண்ணை தொடுகிறது. லி-ட்டருக்கு 50 ருபாய் விற்ற காலம் போய் 80 ரூபாயாகிவிட்டது பெட்ரோல் விலை.
தற்போதய இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணியாக சொல்லப்படுவது ஈரான் மீதான பொருளாதாரத்தடை மற்றும் கனடா, -லிபியா, வெனிசுவேலாவில் ஏற்பட்ட எண்ணெய் உற்பத்தித் தட்டுப்பாடு. கனடா உற்பத்தி சரிப்படுத்த வாய்யப்புள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால் லி-பியாவில் 4 லட்சம், வெனிசுவேலாவில் 1 மில்லியன் (10 லட்சம்) பேரல் எண்ணெய் உற்பத்தி தடை பட்டுள்ளது. ஈரானிடமிருந்து யாரும் எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்க அணைத்து நாடுகளையும் வற்புறுத்தி வருகிறது இந்தியா உட்பட..
இந்த பிரச்சினையைப்பற்றி ஒரு முடிவு எடுக்க கடந்த வாரம் எண்ணெய் ஜாம்பவான்களின் ஞடஊஈ அமைப்பு கூடியது. இதில் ஈரான், சவுதி மற்றும் ரஷ்ய முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதய பற்றாக்குறையைப்போக்க ஏறக்குறைய இரு மில்லியன் பேரல் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஞடஊஈ அமைப்பு ஒரு மில்லியன் பேரல் உற்பத்தியை அதிகப்படுத்துவதாக அறிவித்துத்துள்ளது,
இதில் பெரும் பங்கை சவுதி ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளது.
இது போதாது என்றும் இரு மில்லியனாக உயர்த்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சவுதியிடம் கோரிக்கை வைத்ததாக டிவீட் செய்துள்ளார். இதை சவுதி முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை.
எண்ணெய் நிறுவனங்களின் பங்கு உயரத்தொடங்கி உள்ளது. தற்போது கச்சா எண்ணையின் மதிப்பு ஒரு பேரலுக்கு ஏறக்குறைய 75 டாலர் (5175 ருபாய்) ஆக உள்ளது. கடந்த இரு வாரங்களில் 10 டாலர் கூடியுள்ளது கச்சா எண்ணெய் விலை. கடந்த ஒரு வருத்தத்தில் 50 டாலரில் இருந்து 75 டாலராக வந்துள்ளது கச்சா எண்ணெய் விலை, 50% விலை உயர்வு. இந்த உயர்வால் சிறு சிறு எண்ணெய் நிர்வங்களின் பங்கு பண்மடங்காக உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு நியூ கான்செப்ட் எனெர்ஜி என்ற நிறுவனம் (இதன் பங்கு குறியீடு (ஏஇத), கடந்த நான்கு நாட்களில் 1.33 டாலரில் இருந்து கிட்டத்தட்ட 14 டாலரை தொட்டுள்ளது,
பத்து மடங்கு உயர்ந்துள்ளது. இது மட்டுமல்ல, இன்னும் சில நிறுவனங்களும் கூட. உலகப்பொருளாதத்தின் ஸ்திரத்தன்மையும் தற்போது ஆட்டம் கண்டுள்ளது. அமெரிக்க மற்ற நாடுகளின் இறக்குமதி மீது வரி விதித்துள்ளது, அதிலும் குறிப்பாக சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மீது வரி விதித்துள்ளதை அடுத்து சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க மீது வரி விதித்துள்ளது. இதை “வ”க வர்தகப்போர் என்று வர்ணிக்கிறார்கள். இந்திய பொருட்களின் மீதும் அமெரிக்கா வரி விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது, இதனால் இந்தியாவும் அமெரிக்க பொருட்கள் மீது வரியை உயர்த்தியுள்ளது.
வர்தகப்போர், எண்ணெய் கொள்முதல் தட்டுப்பாடு போன்றவற்றால் கச்சா எண்ணெய் 100 டாலரை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் வணிக அறிஞர்கள்.
இப்ப இந்தியாவிற்கு வருவோம், ஈரானில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை நவம்பருக்குள் நிறுத்திக்கொள்ள அமெரிக்க அழுத்தம் கொடுக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்தியா ஈரானின் கச்சா எண்ணையின் இரண்டாவது இறக்குமதியாளர். ஈரானின் ஏற்றுமதியில் 18 % இந்தியா இறக்குமதி செயகிறது. ஒருவேளை இந்தியா ஈரானில் இருந்து இறக்குமதியை நிறுத்தினாலோ அல்லது குறைத்தாலோ நம்மூரில் எண்ணெய் விலை விண்ணைத்தொட்டு விடும். பெட்ரோல் விலை லி-ட்டருக்கு 100 ரூபாயைத்தாண்டி பஞ்சாய் பறந்து விடும்.
அது மட்டுமின்றி போதாக்குறைக்கு இந்தியா ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலால் தற்போது விலை ஏறாது என்பது பெரும்பாலோர் கணிப்பு. ஒரு வேலை உலகப்பொருளாதாரம், இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் எண்ணெய் தட்டுப்பாடு பிரச்சினை தீரவில்லை என்றால், தேர்தலுக்குப் பிறகு விலைவாசி என்னவாகும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.