Home செய்திகள் (News Articles) சென்டினல் தீவின் திக் திக் மர்மம் விவரிக்கும் டி எண் பண்டிட் யார் அந்த ஏழு...

சென்டினல் தீவின் திக் திக் மர்மம் விவரிக்கும் டி எண் பண்டிட் யார் அந்த ஏழு குழு

சென்டினல் தீவிற்கு சென்று மரணம் அடைந்ததாக கூறப்படும் ஜான் ஆலேன் என்ற வா-லிபரின் உடல் இதுவரை கண்டுடிபிக்கப்படவில்லை.

இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது குடும்பதார் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

அதில் எங்கள் மகன் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வந்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் “தங்கள் மகன் மிகுந்த அன்பு கொண்டவர் என்றும் தங்கள் மகன் மரணம் அடைந்திருந்தால் அதற்கு காரணமான அந்த பழங்குடி ஆதிவாசி மக்களை நாங்கள் மன்னித்து விடுகின்றோம். எங்கள் மகனுக்கு உதவிய மீனவர்களை கைது செய்து துன்புறுத்த வேண்டாம்“ என வேதனையுடன் அந்த கடிதத்தில் ஜான் அலேன் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

ஜான் அலேன் சாக்கர் விளையாட்டின் பயிற்சி ஆளராகவும் இருந்துள்ளார்.

இதுவரை உலக வரலாற்றில் இந்த சென்டினல் தீவிற்கு ஜான் ஆலேனையும் சேர்த்து 7 குழு சென்றுள்ளது.
உலகம் தோன்றியதிலி-ருந்து மனித தொடர்பே இந்த தீவில் உள்ள பழங்குடியின ஆதிவாசிகளுக்கு இல்லாததால் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது. நமக்கு ஏற்படும் சாதாரண காய்ச்சல் வந்தால் கூட இவர்கள் மரணம் அடைந்து விடுவார்கள். இதை பற்றி பின்னர் விரிவாக பார்க்க இருக்கின்றோம்.

இந்த சென்டினல் மக்களை வெற்றிகரமாக நேரில் சந்தித்து விட்டு திரும்பியவர் ஒரே ஒருவர் தான், அவர் பெயர் பண்டிட். அவர் இன்றைக்கும் உயிருடன் உள்ளார். இந்த ஜான் ஆலேன் சம்பவம் குறித்து பேட்டியும் அளித்துள்ளார்.

சென்டினல் மக்களை சந்தித்த தனது ஒரு நாள் பயணம் குறித்து தற்போது மரணம் அடைந்ததாக கூறப்படும் ஜான் ஆலேன் எழுதிய டைரியை அவரது தாய் வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கைக்கு வழங்கியுள்ளார்.

அதில் ஜான் அலேன் சென்டினல் தீவில் தனது ஒரு நாள் பயணத்தில் என்ன நடந்தது என்பதை விவரித்துள்ளார்.

அந்த டைரி மற்றும் கடைசியாக அவரது தாய்க்கு அனுப்பிய மெயில் குறித்தும்

எந்த படையாலும் இதுவரை நெருங்க முடியாத இந்த சென்டினல் தீவை நெருங்கிய அந்த 7 குழு யார் ? இந்த சென்டில் மக்களின் அதிர்ச்சியும் அதிசயங்களும் கலந்த வாழ்கை வரலாறு என்ன? என்பதை தற்போது விரிவாக பார்ப்போம்.

உலக தொடர்பே இல்லாத அந்த மக்களுக்கு கடவுள் குறித்து தெரியப்படுத்த சென்றதாக இறுதியாக எழுதிய டைரியில் ஜான் ஆலேன் குறிப்பிட்டுள்ளார்.

“சிறிய படகில் நான் மட்டும் சென்டினல் தீவின் கடற்கரை அருகே சென்றதும், 5.5 அடி உயரமுள்ள ஒரு மனிதன் மிகுந்த கோபத்துடன் என்னை நோக்கி ஓடி வந்தார் அவர் முகத்தில் மஞ்சல் நிரத்தில் ஏதோ பூசியிருந்தார். நான் அவரை பார்த்து என் பெயர் ஜான் நான் உங்களை நேசிக்கின்றேன், கடவுள் உங்களை நேசிக்கின்றார் என்றேன் ஆனால் அவர்களது பாசையில் ஏதோ பேசி என்னை அம்பால் தாக்கினார். அன்றைக்கு நான் திரும்பி வந்துவிட்டேன்“

இவ்வாறு ஜான் ஆலேன் தனது டைரியில் எழுதியுள்ளார்.

நவம்பர் 16 ஆம் தேதி கடைசியாக தனது தாய்க்கு எழுதிய மின்னஞ்சலி-ல், “அம்மா நான் செய்யும் இந்த வேலை தங்களுக்கு முட்டாள் தனமாக தெரியலாம் ஆனால் கடவுளின் பார்வையில் மிகவும் முக்கியத்துவமானது இறைவா நான் இந்த பயணத்தில் மரணித்து விடக் கூடாது. இது என்னுடைய கடைசி பயணமாகக் கூட இருக்கலாம்“

இவ்வாறு ஜான் ஆலேன் தனது தாயிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறியுள்ளார்.

எனது மகன் இன்னும் உயிரோடு இருக்கலாம் என ஜான் ஆலேனின் தாய் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையிடம் கூறியுள்ளார்.

முதல் நாள் நாங்கள் ஜானை உயிருடன் பார்த்தோம் ஆனால் இரண்டாவது நாள் அவரது கழுத்தில் கயிற்றை கட்டி இழுத்துக் கொண்டு போய் மண்ணில் புதைத்ததை நாங்கள் பார்த்தோம் என ஜானுடன் சென்ற மீனவர்கள் போலி-சாரிடம் தெரிவித்துள்ளனர்.

தாய் எனது மகன் மரணித்திருக்க மாட்டார் எனக் கூறியுள்ளார். மீனவர்கள் அவரது உடலை புதைத்ததை பார்த்தோம் எனக் கூறியுள்ள நிலையில் ஜான் உடல் இதுவரை கை பற்றப்படவில்லை.

தான் செய்வது சட்டவிரோதம் என தெரிந்தே ஜான் அலேன் சென்டினல் தீவிற்கு சென்றதாக அவரது நண்பர் கூறியுள்ளார்.


மேனும் முதல் நாளில் கடலோர பாதுகாப்பு படையின் கண்ணில் தான் படவில்லை இதற்கு கடவுளுக்கு நன்றி எனவும் தனது டைரியில் ஜான் அலேன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீவிற்கு ஜான் அலேன் 7 வது குழுவாக சென்றுள்ளார். இதற்கு முன்னர் 1997 முதல் 1991 வரை உள்ள இடைப்பட்ட காலங்களில் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் டி என் பண்டிட் என்பவர் தனது குழுவுடன் வெற்றிகரமாக சென்டினல் மக்களை அருகில் சென்று சந்தித்து அங்கு தங்கியுள்ளார்.

அவர் தற்போது இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

“இந்த வாலி-பரின் உடலை மீட்க செல்பவர்கள் இளநீர் , இரும்பு உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டும், தீவு பகுதியில் தென்ணை மரம் வளராது. இரும்பு அவர்களுக்கு தங்களது அம்புகளை கூர்மை படுத்த உதவும். அவர்களின் அம்பு எட்டாத தொலைவில் நின்று கொள்ள வேண்டும். செல்பவர்கள் மதியம் அல்லது மாலை நேரத்தில் செல்ல வேண்டும். அந்த நேரங்களில் அவர்கள் கடற்கரை பகுதிக்கு வர மாட்டார்கள். இளநீர் இரும்பு உள்ளிட்டவற்றை அன்பளிப்பாக கொடுத்தால் அவர்கள் ஜான் ஆலேன் உடலை எடுத்து செல்ல அனுமதிக்க வாய்ப்புள்ளது.

அந்த சென்டினல் மக்களை பயங்கரமானவர்கள் எனக் கூறகின்றார்கள். அது தவறானது. அவர்கள் தங்களை காத்துக் கொள்ள நினைக்கின்றார்கள். அவர்கள் இடத்தில் நீங்கள் நுழைய முயற்சி செய்கின்றீர்கள்.

முதல் முறை போகும் போதே அவர்கள் ஜான் மீது அம்பு ஏய்துள்ளார்கள். இதில் ஜான் ஆலேன் சுதாரித்துக் கொண்டு பின் வாங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை மீண்டும் சென்றுள்ளார்.

நான் ஒரு முறை அங்கு சென்ற போது ஒரு சிறுவன் என்னை நோக்கி வந்தான் அவனுக்கு இளநீர் கொடுத்தேன். அவன் எனது முக கண்ணாடிய பிடிங்கினான். நான் அவனிடமிருந்து அதை வாங்க முயற்சி செய்த போது அவன் என்னை கத்தியை காட்டி மிரட்டினான், நான் அதோடு பின் வாங்கி விட்டேன்“

இவ்வாறு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் எ டிண் பண்டின்ட்

தீவில் வாழும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் விதமாக 1966 -1991 இடைப்பப்டட காலங்களில் அப்போது இருந்த இந்திய அரசாங்கத்துடன் இணைந்து டி எண் பண்டிட் செயல்பட்டார். யாரும் நெருங்க முடியாது தீவை நெருங்கி அந்த மக்களிடம் நட்பாக பழகியுள்ளார்.

“இந்த காலங்களில் 7, 8 பேர் கொண்ட குழு அடிக்கடி சென்டினல் தீவிற்கு சென்று வருவோம், அந்த தீவில் தென்னை மரங்கள் கிடையாது அதனால் நாங்கள் அவர்களுக்கு இளநீர் கொண்டு செல்வோம்

அந்த தீவில் 18 குடிசைகள் இருந்தன, ஏராளமான அம்புகள் வில்களை நாங்கள் அவர்கள் வசித்த பகுதியில் பார்த்தோம் அம்புகளை கூர்மையாக ஆக்க அவர்கள் இரும்பை பயன்படுத்தி வந்தார்கள். முத-லில் அவர்களிடம் நாம் அவர்களின் நண்பர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அப்படித் தான் நாங்கள் செய்து அவர்களை சந்தித்தோம். சென்டினல் மக்கள் தங்களை வெளி உலகிற்க்கு காட்டுக் கொள்ள விரும்ப மாட்டார்கள். தங்கள் வாழ்கையின் கலாச்சாரம் மற்றும் வாழ்வை பாதிக்கும் எதையும் அனுமதிக்க மாட்டார்கள்“ என பண்டிட் பேட்டி அளித்துள்ளார்.

பண்டிட்டிற்கு பிறகு வேறு யாரும் அவர்களை நெறுங்கியது இல்லை.
சுனாமியின் போது அவர்களை மீட்க சென்ற ஹெ-லிகாப்டரை அம்பு ஏய்து தாக்கியுள்ளனர் சென்டினல்கள்.

எந்த படையாலும் அவர்களை இதுவரை நெருங்க முடியவில்லை.

சென்டினல் தீவை பாதுகாக்கப்பட்ட இடமாக இந்திய அரசு அறிவித்துள்ளது. சென்டினல் தீவு சுற்றி 3 மயில் தூரத்திற்கு உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜான் ஆலேன் மற்றும் பண்டிட் உடன் சேர்த்து 7 குழு இதுவரை சென்டினல் பகுதிக்கு செல்ல முயற்சித்துள்ளார்கள்.

1880 ஆண்டு, போர்ட்மேன் என்ற பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் ஆயுதங்களுடன் கூடிய படையுடன் அந்த சென்டினல் தீவின் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு ஆண் ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகளை அவர் பிடித்துள்ளார்.

ஆண் பெண் இருவம் நோய் வந்து இறந்து போய் உள்ளனர்.

மீதி இருந்த நான்கு குழுந்தைகளுடன் இணக்கமாக பழகி உள்ளே செல்ல அவர் முயற்சித்துள்ளார். ஆனால் சென்டினல் மக்கள் தங்கள் இனத்தை சேர்ந்த இருவரை கொன்று விட்டதாக இவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

1974 ஆம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபிக் டிவி இந்த தீவு பற்றி படம் பிடிக்க சென்றுள்ளது. போலி-ஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களையும் சென்டினல் மக்கள் தாக்கி திருப்பி அனுப்பியுள்ளனர். தங்கள் பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.

1981 ஆம் ஆண்டு ப்ரைம்ரோஸ் என்ற ஒரு கார்கோ கப்பல் சென்டினல் பகுதியின் கரையில் மாட்டிக் கொண்டுள்ளது. இதை பார்த்த 50 சென்டினல்ஸ் கப்பலி-ல் இருந்தவர்களை தூரத்தில் இருந்து மிரட்டி தாக்கியுள்ளனர். பின்னர் அவசர தகவல் கொடுக்கப்பட்டு ஹெலி-காப்பட்டர் மூலம் கப்பலி-ல் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

1990 ஆம் ஆண்டு இந்திய அரசு அவர்களுடன் நல்லுறைவு ஏற்படுத்த முயற்சித்து அதில் பலன் ஏற்படாததை தொடர்ந்து அது பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டது.

இந்த சென்டினல் தீவு 55 ஆயிரம் ஆண்டுகள் பலமையானது. 55 ஆயிரம் ஆண்டுகளாக இந்த மக்கள் இங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர்.

2011 ஆம் ஆண்டு இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 12 ஆண்கள் 3 பெண்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த தீவு 14700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த தீவில் உள்ளவர்கள் இன்றைக்கும் கற்காலத்து மனிதர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கென தனி மொழி உள்ளது. அந்த மொழி உலகில் வேற யாருக்கும் தெரியாது. இவர்களுக்கும் உலகில் உள்ள மற்ற மொழி புரியாது.

இதனாலேயே இவர்களுடன் தொடர்பு வைத்து நாங்கள் எதிரி அல்ல என்பதை யாராலும் புரிய வைக்க முடியவில்லை. செயலி-ல் காட்ட முயற்சி செய்தால் நம்மை தாக்க வருகின்றார்கள் என நினைத்து அம்பு ஏய்து கொன்று விடுகின்றார்கள்.

உலகில் மிக கொடூர ஆதிவாசிகள் பட்டி-லில் இவர்கள் முதல் இடத்தில் இருந்தாலும் இவர்கள் மனிதர்களை கொன்று மனித இறைச்சியை உண்பவர்கள் கிடையாது. ஏன் எனில் பல சடங்கள் இவர்களின் கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இவர்களுக்கு நம்மை போன்று நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது. அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு இதுவும் முக்கிய காரணம். நமக்கு ஏற்படும் சாதாரண வைரஸ் பாக்கிரியாவால் உருவாகும் காய்ச்சலை கூட அவர்களால் தாங்க முடியாது. ஏன் எனில் அவர்கள் உலக மனிதர்களுடன் தங்களது தொடர்பை முற்றிலும் துண்டித்து வாழ்ந்து வருகின்றனர்.
நவீன உலகில் உள்ள கிருமிகளுக்கு ஏற்றவாரு அவர்கள் உட-லின் நோய் எதிர்ப்பு சக்தி செயல்படாது. நமக்கு பலக்கப்பட்ட கிரிமி அவர்களது உடலுக்கு புதிய கிருமியாக இருக்கும்.

இங்கு அதிகபட்சமாக 50 பேர் இருக்கலாம் . இந்த 50 பேர் ஒட்டுமொத்த உலகத்திற்கே பெரும் சவலாக உள்ளார்கள். இங்கு வருபவர்களுக்கு சங்கு தான் என உலகத்தையே பயமுறுத்தி வருகின்றார்கள். சென்டினல் தீவின் பல்வேறு விஷயங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளது.