Home வீடியோ (Video) என்னை என் உறவினர்கள் யாருமே வந்து இதுவரை பார்க்கவில்லை நிர்மலாதேவி

என்னை என் உறவினர்கள் யாருமே வந்து இதுவரை பார்க்கவில்லை நிர்மலாதேவி

நிர்மலாதேவியின் ஆடியோ வெளியாகி 8 மாதங்கள் கடந்து விட்டது. விசாரனை இன்னும் முடிந்தபாடில்லை.

கடந்த 8 மாதங்களாக சிறையில் இருந்து நீதிமன்றம் செல்வது நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு செல்வது, இது தான் நிர்மலாதேவியின் வாழ்கையாக இருந்து வருகின்றது.

கடந்த 8 மாதங்களாக ஜாமின் வழங்கப்படாமல் சிறையில் இருக்கும் நிர்மலாதேவியை அவரது கணவர் உட்பட உறவினர்கள் யாரும் வந்த பார்க்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அவர் வழக்கம் போல் நீதிமன்றத்தில் ஆஜகராகியுள்ளார். வழக்கமாக நீதிமன்றம் வரும் போது பத்திரிக்கையாளரிடம் எதையும் பேசாமல் செல்லும் நிர்மலாதேவி நேற்று பேசியுள்ளார்.

”இந்த வழக்கில் என்னன்னமோ நடக்குது என்ன நடக்குதுன்னே தெரியல” என நிர்மலா தேவி நிரூபரிடம் கூறியுள்ளார்.

“என்னோடு அண்ண, அண்ணி, கணவர் யாருமே வந்த என்னைய இதுவரை வந்து பாக்கல தயவு செய்து அவங்கள வந்து என்னைய பாக்க சொல்லுங்க என் கணவரக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி அவர வந்த என்னைய பாக்க சொல்லுங்க அவரு கிட்ட நான் நிறைய பேச வேண்டியது இருக்கு” என நிர்மலாதேவி கூறியுள்ளார்.

”நீங்க உங்க கணவர் கிட்ட பேசனும் என சொல்றீங்க ஆனா அவரு விவாகரத்து கேட்டு அப்பீல் பன்னிருக்காரே ? என கேட்டதற்கு ”அந்த ஆடியோ கேட்ட கோபத்துல செய்திருப்பாரு அவர வந்து என்னைய பாக்க சொல்லுங்க நான் அவரு கிட்ட பேசனும் என நிர்மலாதேவி கூறியுள்ளார்.

”உங்க வக்கீல் கூட உங்களுக்காக நீதிமன்றத்திற்கு வருவதில்லையே வழக்கில் இருந்து உங்க வக்கீல் விழகி விட்டாரா ?’ என கேட்டதற்கு ”ஓ அப்படியா அவரு வழக்கில் இருந்து விழகி விட்டார் என்பது நீங்க சொல்லி தான் எனக்கு இப்ப தெரியுது. இந்த வழக்குல என்னன்னமோ நடக்குது என்ன நடக்குதுன்னு எனக்கு ஒன்னும் புரியல” என நிர்மலாதேவி கூறியுள்ளார்.

”சிறையில் உங்களுக்கு ஏதும் மிரட்டல்கள் வருகிறதா” எனக் கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை. உறவினர்கள் யாரும் பார்க்க வராததால் புது ஆடைகள் கொண்டு வருவதற்கு கூட எனக் யாரும் ஆட்கள் இல்லை. ஆரம்பத்தில் கொண்டு வந்த பழைய ஆடைகளை தான் மீண்டும் மீண்டும் உடுத்தி வருகின்றேன் எனக் கூறியுள்ளார் நிர்மலாதேவி.

எதை கேட்டாலும் திரும்ப திரும்ப என் வீட்டில் உள்ளவர்களை வந்து என்னய பாக்க சொல்லுங்க எனக் கூறிய நிர்மலதேவியிடம், ”சரி இந் வழக்க பத்தி சொல்லுங்க” எனக் கேட்கும் போது சுதாரிப்பாகி அத பத்தி மட்டும் எதுவும் கேக்காதீங்க என எனக் கூறி விட்டு கிழிம்பி விட்டாராம் நிர்மலாதேவி!