Home தமிழ்நாடு (Tamil Nadu) பள்ளியில் நூதனமாக கடத்தப்பட்ட சிறுவன் ஒரே நாளில் கண்டுபிடித்த ஆய்வாளர் டீம்

பள்ளியில் நூதனமாக கடத்தப்பட்ட சிறுவன் ஒரே நாளில் கண்டுபிடித்த ஆய்வாளர் டீம்

காணாமல் போன சிறுவனை சுமார் 7 மணி நேரத்தில் திறம்பட செயல்பட்டு கண்டுபிடித்து மீட்ட புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் தலைமையிலான டீமை சென்னை கமிஷ்னர் ஏகே விஸ்வநாதன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

ஒரு லட்சம் ரூபாய்க்கு குழுந்தையை விற்க இருந்ததும் நூதமனாக செயல்பட்டு குழந்தையை கடத்தியதும் விசாரனையில் தெரியவந்துள்ளது.சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரகாஷ் துர்கா தேவி தம்பதியன் மகன் அஜய்.

3 வயது சிறுவன் அஜயை பள்ளிக் கூடத்தில் இருந்து அழைத்து வர சென்ற பிராகஷ், அங்கு அஜய் இல்லை என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதை தொடர்ந்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். உடனடியாக களத்தில் இறங்கிய புளியந்தோப்பு ஆய்வாளர் ரவி தலைமையிலான டீம். அருகில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் இரண்டு பெண்கள் சிறுவனை தூக்கி சென்றது பதிவாகியிருந்தது.

சிறுவன் படித்த பள்ளிக் கூடத்தில் விசாரித்ததில் சிறுவனின் அத்தை எனக் கூறி இரண்டு பெண்கள் சிறுவனை அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.

நீங்க யாருன்னு தெரியல எனக் கூறி சிறுவனை அனுப்ப பள்ளி ஆசிரியர் மறுத்த போது, வந்த இரண்டு பெண்கள் , இந்தாங்க அஜய் யோட அம்மாவிடமே பேசுங்க என தங்களிடமிருந்து செல்போனில் இருந்து ஏதோ ஒரு பெண்ணிற்கு போன் செய்து கொடுத்துள்ளனர். அந்த முனையில் இருந்து பெண் நான் தான் அஜயோட அம்மா அனுப்பி வையுங்கள் எனக் கூறி ஆசிரியரை இந்த கும்பல் நூதமாக ஏமாற்றி சிறுவனை கடத்தி சென்றுள்ளது.

அருகில் இருந்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போ-லிசார் சிறுவனை இரண்டு பெண்கள் கடத்தி செல்வதை கண்டு பிடித்தனர். குழந்தையை கடத்தி சென்றது ஏற்கவே சிறுவன் அஜய் வீட்டில் வேலை செய்த குட்டியம்மாள் என்பதை அறிந்த போ-லிசார் அவரின் வீட்டிற்கு சென்று குழந்தையை மீட்டனர். தாயும் மகளும் சேர்ந்து சிறுவன் அஜய் ஐ கடத்தி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்க விலை பேசியிருப்பது தெரியவந்ததை தொடர்ந்து இருவரையும் போலி-சார் கைது செய்தனர். குழந்தை கிடைத்த மகிகழ்ச்சியில் குழந்தையை கண்டுபிடித்த காவல் துறை அதிகாரிக்கு பெற்றோர் கண்ணீர் மழ்க நன்றி தெரித்தனர். சந்தோசத்தில் காவல்துறை அதிகாரியின் காலில் விழ சென்ற தாயிடம் அதெல்லாம் வேண்டாம் இந்தாங்க உங்க குழந்தை என காவல்துறை அதிகாரி குழந்தையை தாயிடம் ஒப்படைத்தார்.

சமூக வலைதளத்தில் குழந்தையை கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இந்த சம்பவத்தில் பெற்றோர்களுக்கும் பள்ளிக் கூடத்தை நடத்துபவர்களுக்கு பல பாடங்கள் இருக்கின்றது என்பது குறிப்பிடதக்கது.