Home தமிழ்நாடு (Tamil Nadu) கால் செயலிழந்த இளம் மனைவி கணவரின் விடா முயற்சி!

கால் செயலிழந்த இளம் மனைவி கணவரின் விடா முயற்சி!

கையில் போதிய பணம் இல்லாமல் தனது மனைவிக்கு சிகிச்சை பார்க்க வந்த கணவருக்கு சமூக வலைதளத்தின் உதவியுடன் மருத்துவர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றார்.

‘பணத்தை முன்னாடியே கட்டுனாதான் அட்மிஷனே போடுவோம்‘ என்பவர்களுக்கு மத்தியில் போதிய பணம் இல்லை என்றதும் ‘வேற இடத்த பாருங்க‘ என விரட்டி விடாமல் சமூக வலைதளத்தின் உதவியை நாடி அதன் மூலம் பொதுமக்கள் வாரி கொடுத்த பணத்தில் அந்த பெண்ணிற்கு தேனியை சேர்ந்த மருத்துவர் சிகிச்சை அளித்து வருகின்றார்.

அந்த தம்பதிகளின் கதையும் சுவாரஸ்யமானது. கல்கத்தாவை சேர்ந்த அந்த தம்பதிகள் சென்னைக்கு கூ-லி வேலை செய்ய வந்துள்ளனர்.

அந்த பெண்ணிற்கு 8 வயதில் இருந்து ‘Spastic Paraparesis‘ என்ற நோயால் அவரது கால் பாதிக்கப்பட்டு அவரால் நடக்கவும் நிற்கவும் முடியாது.

இதை தெரிந்தும் அந்த பெண்ணை கல்கத்தாவை சேர்ந்த அந்த வாலி-பர் காத-லித்து திருமணம் செய்துள்ளார்.

இரண்டு வீட்டு எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். என் மனைவியை நான் பார்த்துக் கொள்கின்றேன் எனக் கூறி வீட்டை விட்டு வெளியே வந்து பெற்றோர்களின் உதவியின்றி வசித்து வந்துள்ளனர்.
மனைவியால் நடக்க முடியாததால் எங்கு சென்றாலும் மனைவியை தூக்கிக் கொண்டு தான் அந்த வாலி-பர் செல்கின்றார்.

“மனைவியை தரையில் நடக்க விடமாட்டார் மாப்பிள்ளை“ என்பார்கள் அது இந்த வாலிபருக்கு தான் பொறுந்தும்.

தன் மனைவியின் நோயை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என முடிவு செய்து தன் வாழ் நாள் முழுவதும் சேமித்து வைத்த 15 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு தேனியை சேர்ந்த இந்த மருத்துவரை சென்னையில் உள்ள அவரது கிளீனிக்கில் சந்தித்துள்ளார்.

கையில் இருந்த காசை வைத்து இரண்டொரு நாள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார் மருத்துவர். சிகிச்சையில் சற்று முன்னேற்றம் தெரிந்துள்ளது.

தொடர்ந்து 6 மாதம் சிகிச்சை அளித்தால் ஓரளவு நிற்கவும் நடக்கவும் முடியும் என மருத்துவர் கூறியுள்ளார். கணவர் கொண்டு வந்த பணம் தீர்ந்து போக மருத்துவர் தன்னால் முடிந்த அளவு தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
தொடர் சிகிச்சை அளிக்காவிட்டால் கால் ஊனமாக நேரிடும் என்பதை உணர்ந்த மருத்துவர் தனது முகநூலி-ல் இந்த தம்பதிகள் குறித்து பதிவிட்டார்.

””காதலி-த்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இரு வீட்டாரின் உதவியின்றி தனது மனைவியை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என வந்துள்ளார் மனைவியால் நிற்கவோ நடக்கவோ முடியாது. என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன் தொடர் சிகிச்சை அளிக்காவிட்டால் கால் ஊனமாகிவிடும் பிசியோ தரப்பி நர்ஸ் சம்பளம் மற்றும் தைலம் உள்ளிட்ட செலவுகள் உள்ளது விருப்பம் உள்ளவர்கள் உதவி செய்யுங்கள்””

இவ்வாறு மருத்துவர் பதிவு செய்ததும் அதை பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணின் மருத்துவ செலவிற்கு அள்ளிக் கொடுத்தனர். எந்த அளவிற்கு எனில பதிவு செய்த மருத்துவரே 24 மணி நேரத்தில் , போதும் நீங்க அள்ளி கொடுத்துட்டீங்க இனி அனுப்ப வேண்டாம் என பதிவிட்டார்.
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அந்த பெண்ணின் மருத்துவ செலவிற்கு உதவி கிடைத்ததாகவும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பதாகவும் அதன் மூழு கணக்கு விபரத்தையும் மருத்துவர் தனது முகநூ-ல் வெளியிட்டார்.

கொலை, கொள்ளை , மோசடி . ஏமாற்ற வேலை, கள்ளக்காதல் இது போன்ற செய்திகளை நாம் தொலைக்காட்சி மற்றும் இது போன்ற செய்திதாள்களில் பார்க்கும் போது “என்னடா உலகம் இது இப்படி மோசமா இருக்கே“ என எண்ணியிருப்போம்.

நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போன்று நல்ல உள்ளம் கொண்டவர்களும் இவ்வுலகில் ஏராளம் பேர் வாழ்கின்றனர் என்பதை எடுத்து காட்டுகின்றது இந்த சம்பவம்.
“மனைவி ஊனம் என தெரிந்தும் திருமணம் செய்து கொண்டு எங்கு சென்றாலும் மனைவியை சுமந்து செல்லும் கணவர்,

பணம் இருந்தா தான் பாப்பேன் என்று தட்டிகளிக்காமல் உதவி செய்யும் மருத்துவர்,

சம்பவத்தை கேள்விபட்டதும் வாரி கொடுக்கும் மக்கள்“

இப்படி வாழ்கையில் நமக்கு நம்பிக்கையூட்டும் சம்பவமாக இது அமைந்துள்ளது.

சமூக வலைதளம் மூலம் பல நல்ல காரியங்களும் நடக்கின்றது. நல்ல காரியங்களையும் சமூக வலைதளம் மூலம் செய்ய முடியும் வெறுமென லைக் கமண்டு போட்டு விட்டு செல்பவர்கள் அல்ல நம் மக்கள் என்பதையும் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது.