Home தமிழ்நாடு (Tamil Nadu) அரசு பள்ளியில் எல்கேஜி அரசுத்தும் அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளியில் எல்கேஜி அரசுத்தும் அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. அரசு பள்ளி என்றாலே பெற்றோர்கள் மத்தியில் ஒரு குறைந்த மதிப்பிடே நிலவுகிறது. தங்களின் குழந்தை கவர்மண்ட் பள்ளியில் படிக்கின்றான் என்று சொல்வதை விட தனியார் பள்ளியில் படிக்கின்றான் என சொல்வதை தான் இன்றைக்கு பெற்றோர்கள் கவுரவமாக நினைக்கின்றார்கள். அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு , கல்வியின் தரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு பின்னால் இருந்தாலும் அப்துல்கலாம் உள்ளிட்ட பல விஞ்சானிகள் மற்றம் பெரும் தலைவர்கள் அரசு பள்ளியில் படித்து முன்னேறியவர்கள் தான் என்பதை நாம் மறந்து விட முடியாது.

அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும் பெற்றோர்களை அரசு பள்ளியின் பக்கம் ஈர்க்கவும் தமிழக அரசு தற்போது ”மாதிரி பள்ளிகள்” என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தை கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த சுதந்திர தினத்தன்று துவங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மழலையருக்கான எல்கேஜி யுகேஜி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவைகள் ஆங்கில வழி கல்வி அடிப்படையில் செயல்படும். மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளி என 32 மாவட்டத்திற்கும் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படவுள்ளது.

ஒரு மாதிரி பள்ளிக்கு 50 லட்சம் வீதம் மொத்தம் 16 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை அறிமுகம் செய்யும் விதமாக சுதந்திர தினத்தில் சென்னை எக்மோரில் உள்ள மாநில பெண்கள் அரசு பள்ளியில் கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளிக்கான புதிய கட்டிடத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

எக்மோரில் உள்ள இந்த பள்ளி 1783 ஆண்டு (ஆம் 235 ஆண்டுகளுக்கு முன்னர்) கட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

தற்போது இந்த பள்ளியில் ஸ்மார்ட் க்ளாஸ், இன்டர்நெட் வசதி, மழலையருக்கான வகுப்புகள், நவீன வகுப்பறை உள்ளிட்ட தனியாருக்கு நிகரான அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. மாதிரி பள்ளி திட்டத்துடன் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்புகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்படவுள்ளது. 9, 10 , 11 ,12 ஆம் வகுப்புகள் அனைத்தும் கணிணி மயமாக்கப்படவுள்ளது. இதற்காக மட்டும் அரசு 420 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு ஸ்கில் ட்ரைனிங் என்ற சிறப்பு வகுப்புகள் அரசு பள்ளிகளிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் படித்தவுடன் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உதவியாக இருக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மாதிரி பள்ளிகளில் மட்டுமல்லாமல் அங்கன்வாடி மையங்கள் உள்ள அரசு பள்ளிகளிலும் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் துவங்வது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து வருதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

எல்கேஜி யுகேஜிக்கான தேர்வு அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிதியாண்டில் கல்விதுறைக்கு அரசு 27 ஆயிரம் கோடி ரூபாய் ஒதிக்கியுள்ளது குறப்பிடதக்கது.
மாணவிகள் தங்களின் பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்க 14417 என்ற இலவச எண்ணையும் சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

பொதுவாக சமூக வலைதளங்களில் பெரும்பாலன அமைச்சர்கள் குறித்து மீம்ஸ்கள் உலா வரும். ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இதற்கு விதிவிலக்கு. அவர் தன் துறை சார்ந்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால் மீம் கிரேட்டர்களுக்கு அவர் தீனி போடுவதில்லை.

அமைச்சர் செங்கோட்டைன் அவர்கள் கல்விதுறை அமைச்சர் ஆனதிலிரு-ந்து அரசு பள்ளி மற்றும் கல்விதுறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கின்றார் என்ற பெயரும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு சமூக ஊடகங்களில் உண்டு.

இந்த திட்டங்கள் சரியான முறையில் சொன்ன படி நடைமுறைப்படுத்தப்பபட்டு தரமான ஆசிரியர்கள் அதிகாரிகளை கொண்டு அது கண்காணிக்கப்படும் பட்சத்தில் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிக்கு நிகராக மாறி பெற்றோர்கள் அரசு பள்ளிகளின் பக்கம் ஈர்க்கும் நிலை உருவாகும். சாமானியனுக்கும் தரமான கல்வி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இந்த திட்டம் தீவிரமாக செயல்படும் பட்சத்தில் தனியார் பள்ளிகள் தங்களின் வசூல் வேட்டையை நிறுத்தும் நிலை உருவாகும். போட்டி கொடுக்குமா தனியார் பள்ளிகளுக்கு இந்த புதிய திட்டங்கள்?