Home செய்திகள் (News Articles) பிக்பாசுக்கு தமிழகத்தில் பெருகும் எதிர்ப்பு குறையும் மவுசு!

பிக்பாசுக்கு தமிழகத்தில் பெருகும் எதிர்ப்பு குறையும் மவுசு!

வட மாநிலங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருடா வருடம் மவுசு கூடிக் கொண்டே போகின்றது அதை பார்த்து தமிழ்நாட்டிலும் ஆரம்பிக்கலாம் என சென்ற வருடம் இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் ஆரம்பிக்கபட்டது.

பிரபல தனியார் தொலைக்காட்சி இதை ஒளிபரப்பியது. ஆனால் தமிழ்நாட்டில் கதை தலைகீழாகிவிட்டது. சென்று ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருந்த மவுசு இந்த ஆண்டு இல்லை. இதை நாம் சொல்ல வில்லை அந்த நிகழ்ச்சியை நடத்தும் கமலே நேயர்களிடம் கூறியுள்ளார்.
ஏன் பிக்பாசு நிகழ்ச்சிக்கு ஓட்டு போட மாட்ரீங்க போன வருசம் வந்த ஓட்ட விட இந்த வருசம் ரொம்ப கம்யா வந்துருக்கு ஓட்டு போடுங்க” என தேர்தலி-ல் ஓட்டு கேட்பதற்கு முன்னரே டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஓட்டு கேட்க ஆரம்பத்திவிட்டார் கமல்.

இது ஒரு புறமிருக்க சினிமா துறையை சார்ந்த நடிகர் ஒருவரே பிக்பாஸ் நிகழ்ச்சியை மூடர் கூடம் என பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
பிரபல நடிகர் நவீன், சென்ராயன் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் பின் வருமாறு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

””வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்””

இதில் வெளிப்படையாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நவீன் மூடர்களின் கூடாரம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில் அவர் பதிவிட்டதை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

இது மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த மீம்ஸ்களுக்கு பஞ்சமில்லை. மீம்ஸ் கிரேட்டர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தாலி-த்து எடுக்கின்றனர். இதையும் நாம் சொல்லவில்லை கமலே கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி சென்னையில் போராட்டமே சென்ற மாதம் நடைபெற்றது.

மேலும் தமிழகத்தை சேர்ந்த சினிமா தொழிலாளர்களே பிக்பாஸ் நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு போராட்டத்தை அறிவித்தனர்.


திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி’ பிக்பாஸ் நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளர்களுக்கு தான் அதிக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே இந்த நிகழச்சியை புறக்கணிக்கப் போவதாகவெல்லாம் அறித்ததது.

வட மாநிலங்களில் கொடி கட்டி பறக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் ஏன் சென்ற வருடத்தை போன்று அவ்வளவாக எடுபடவில்லை ? தமிழகம் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் ஒழுக்கத்திற்கும் பெயர் பெற்ற மாநிலம்.

ஏ சான்றிதழ் பெற்று சினிமா தியேட்டர்களில் காட்டப்பட வேண்டிய காட்சிகளை ரியாலி-ட்டி ஷோ என்ற பெயரில் வீட்டின் நடு முச்சந்தியில் போட்டு காட்டினால் எந்த பெற்றோர் ஏற்றுக் கொள்வார்கள் ?

குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க யார் அனுமதிப்பார்கள் ? ரியா-லிட்டி ஷோ என்ற பெயரில் பாத் ரூமி-லிருந்து படுக்கை அறை வரை கேமராக்களை வைத்து அறைகுறை ஆடைகளுடன் பெண்கள் சுற்றி திரிவதை காட்டினால் எப்படி இந்த நிகழச்சிக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு அதிகரிக்கும் ?

எதை காட்ட வேண்டும் எதை காட்டக் கூடாது என்ற எந்த வரை முறையும் இல்லாமல் எதை காட்டினால் டிஆர்பி அதிகரிக்கும் என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு நிகழ்ச்சி நடத்தினால் அது சமூகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு பதிலாக கெட்ட மாற்றங்களையே ஏற்படுத்தும்.

ஏற்கனவே இந்த டிவி சீரியல்களால் பெற்ற குழந்தைகளையே கொள்ளும் அளவிற்கு இந்த சமூகத்தில் சிலர் உருவாகியுள்ளனர்.

அது போதாது என்று தற்போது இந்த நிகழ்ச்சி புதிதாக தமிழகத்தில் முளைத்துள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் என்ன செய்கின்றார்கள், பகைமை, ஏமாற்று ,மோசடி, பொய், பழி வாங்குவது, பித்தலாட்ட, புறம் பேசுவது , போட்டு கொடுப்பது, பொரணி பேசுவது, சதி திட்டம் தீட்டுவது, இதை தானே பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் செய்கின்றார்கள் அதை தானே எல்லா வீட்டின் முச்சந்தியிலும் டிவியின் மூலம் போட்டு காட்டுகின்றனர்.

சினிமா பிரபலங்களின் மீது உள்ள மோகம் தமிழகத்தில் இன்னும் மாறவில்லை. பிரபலங்கள் சினிமாவில் என்ன செய்கின்றார்களே அதை அப்படியே பின் பற்றி தங்களது வாழ்கையில் கடைபிடித்து செய்வதை பலர் பேஷனாக கருதி கொண்டுள்ளனர்.

அவர்களின் ஸ்டைல், உடை, பாவனை, பேச்சு என அனைத்தையும் அப்படியே தனது வாழ்கையில் கடை பிடிக்கின்றனர், அது நல்லாத கெட்டதா என யோசிப்பது இல்லை. உதாரணத்திற்கு புகைபிடிக்கும் பழக்கத்தை கூறலாம்.

சினிமாவில் அவர்கள் செய்வது நடிப்பு என தெரிந்துமே அவர்களை பின் பற்றும் இளைஞர்கள் மத்தியில் ரியா-ட்டி ஷோ என்ற பெயரில் உண்மையிலேயே பிரபலங்கள் பொய், பித்தலாட்டம் செய்கின்றார்கள் என்பதை காட்டினால் என்னவாகும், சமூகத்தில் அது நல்ல மாற்றங்களை ஏற்படுத்துமா? நிகழ்ச்சி நடத்துபவர்கள் இதை யோசிக்க வேண்டமா ? இதற்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுமா ?

பொதுக்கூட்டங்களில் அரசியல் தலைவர்கள் பேசுவதை உற்று கவனித்து வழக்குகள் பதிவு செய்யும் அதிகாரிகள் இது போன்ற நிகழ்ச்சிகளையும் கவனிக்க வேண்டும், பொழுது போக்கு என்பது சமூகத்தை சீர் கெடுக்காதை வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாகவும் இது போன்ற நிகழ்ச்சிகளை எதிர்ப்பவர்களின் கருத்தாகவும் உள்ளது.