Home செய்திகள் (News Articles) 2 ஆயிரம் ரூபாய்கு விற்கும் மருந்து 200 ரூபாய்! அரசின் ஜெனரிக் மெடிக்கல் ஸ்டோர் பற்றி...

2 ஆயிரம் ரூபாய்கு விற்கும் மருந்து 200 ரூபாய்! அரசின் ஜெனரிக் மெடிக்கல் ஸ்டோர் பற்றி தெரியுமா உங்களுக்கு

நமது மாத சம்பளத்தில் பெரும் பகுதி மருந்து மாத்திரைக்கே போய் விடுகின்றதே என்ன செய்வது என புலம்பும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாளுக்கு நாள் புது புது நோய்கள் புது புது மருந்துகள் என வந்த வண்ணம் இருக்கின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய மருந்து சந்தையின் மதிப்பு 33 பில்லியன் டாலர் ஆகும் அதாவது இந்திய மதிப்பில் தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் என புள்ளி விபரங்கள் கூறுகின்றது.

இந்தியாவின் பெரிய வர்த்தக சந்தையாக இன்றைக்கு மருந்து மாத்திரைகள் மாறி வருகின்றது.

அத்தியாவசிய மருந்துகளை கூட மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். மருந்து மாத்திரைகளுக்கு பணம் செலவழிக்க முடியாமல் மரணமைடைந்தவர்கள் ஏராளனம்.

இவைகளை சரி செய்ய 2008 ஆம் ஆண்டே மத்திய அரசு ஆரம்பத்தில் ஒரு திட்டம் கொண்டு வந்தது. ”ஜெனரிக் மருந்துகள், அதிக விலையில் விற்கப்படும் அதே மருந்துகளை மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குது இந்த திட்டத்தின் நோக்கம்!

ஆனால் இந்த திட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஜெனரிக் மருந்தகங்கள் மக்களிடம் சென்றடையவில்லை. ஆனால் தற்போது மத்திய அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்து பல்வேறு சலுகைகளை வழங்கி ஜெனரிக் மருந்தகங்களை திறக்க வழிவகை செய்துள்ளது.

இதற்காக Bureau of Pharma PSUs of India என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு இந்த குறைந்த விலை மருந்துகடைகளை திறப்பதற்கான சலுகைள் உரிமைகளை வழங்கி வருகின்றது.

இந்த கடைகளை தங்கள் பகுதியில் திறப்பவர்களுக்கு 2 லட்சத்திற்கும் மேலாக நிதியுதவி செய்யப்படுகின்றது.

மத்திய அரசின் இந்த திட்டத்தின் பெயர் ஓஹய் ஆன்ள்ட்ஹக்ட்ண் (ஜன் அவ்ஷாதி) என்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் தற்போது தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஜெனரிக்கு மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அதே மருந்துகள் 10% முதல் 90% சதவிகிதம் வரை குறைந்த விலையில் இந்த மருந்தகங்களில் கிடைக்கும்.

சாதாரண மெடிக்க-லில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் மருந்துகளை வெறும் 200 ரூபாய் கே இங்கே நாம் வாங்கலாம்.

நாம் தற்போது சொல்லும் உதாரணத்தை பார்த்தால் நீங்களே ஆச்சர்யபட்டு போவீர்கள்

ஙங்ழ்ர்ல்ங்ய்ங்ம் என்ற மருந்து 1 கிராம் அதாவது 1000 எம்ஜி ஊசியில் ஏற்றும் மருந்து தற்போது மெடிக்கல் ஷாப்பில் நீங்கள் கேட்டால் அதன் விலை 2,733 (புகைப்படத்தை பார்க்கவும்). ஆனால் அதே மருந்து மத்திய அரசின் திட்டத்தின் மூலம் திறக்கப்பட்டுள்ள ஜெனரிக் மருந்து கடைகளில் வெறும் ரூபாய் 256 தான் (மத்திய அரசு வெளியிட்டுள்ள ஜெனரிக் மருந்து விலை, புகைப்படத்தை பார்க்கவும்)
கிட்ட தட்ட 90% சதவிகிதம் விலை குறைவு. எப்படி ஒரே மருந்தில் இவ்வளவு விலை வித்தியாசம் வரும் என பலர் கேட்கலாம்.

இரண்டிற்கும் வித்தியாசம் பிராண்ட் பெயர் தான். அதாவது கம்பேனியின் பெயர் தான். இரண்டு மருந்திலும் உள்ள மூலக்கூறுகள் ஒன்று தான் (மத்திய அரசால் அங்கீகாரம் பெற்றது எனவே போலி-யாக இருக்க வாய்ப்பில்லை கூடுதல் தகவலுக்காக). 250 ரூபாய்க்கு விற்க வேண்டிய மருந்தை 2700 ரூபாய்க்கு விற்பதற்கு காரணம் அவர்கள் பிராண்டின் பிரபலம்!

நம்மில் பலர் கூட, மெடிக்கல் ஷாப்பில் இதே மருந்து வேற பிராண்டில் உள்ளது விலையும் குறைவு வாங்குறீங்களா என கடைக்காரர் கேட்டால் அஹான்.. என பெட்ருமாஸ் லைட்டே தான் வேனும் என்பது போல் டாக்டர் எழுதிய பிராண்டு தான் வேணும் என்போம். காரணம் மருந்து ஏதும் மாறி ஏதும் பிரச்சனை வந்துருமோ என்ற அச்சம்.

இந்த அச்சம் தான் மருந்து சந்தை லட்சக்கணக்கானகோடி ரூபாய்களாக மாறிய காரணங்களில் ஒன்று.

இதை உடைக்கும் வண்ணம் தான் மத்திய அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ஜெனரிக் மருந்துகளை தான் மக்களுக்கு எழுத வேண்டும் என மத்திய அரசு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தாலும் பெரும்பாலன மருத்துவர்கள் அதை காதில் போட்டுக் கொள்வதில்லை. அது உரிய முறையில் கண்டிக்கப்படுவதும் இல்லை. எனவே மருத்துவர்கள் அதை சட்டை செய்வதில்லை.

காரணம் ஜெனரிக் மருந்துகளை எழுதினால் மருந்து கம்பேனிகளிடமிருந்து தங்களுக்கு கிடைக்கும் கமிஷ்ன் இன்பு சுற்றுலா போன்ற வருமானம் போய் விடும்.

நாமெல்லாம் மருத்துவமனையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவரசமாக நிற்கும் வேலையில் ஒருவர் டை மாட்டிக் கொண்டு கையில் ஒரு சூட்கேசை வைத்துக் கொண்டு நோயாளிகளை முந்திக் கொண்டு டாக்டரை பார்க்க செல்வார். டாக்டரும் நோயாளியை பார்ப்பதை நிறுத்தி அந்த டை கட்டிய நபரை வரவேற்பார்.

அவர் வேறு யாருமல்ல மருந்துவிற்க்கும் கம்பேனியில் இருந்து ”உங்க நோயாளிக்கு எங்க மருந்த எழுதுங்க சார் உங்களுக்கு அந்த ஆஃபர் இருக்கு இந்த ஆஃபர் இருக்கு இவ்ளோ கமிஷன் அவ்ளோ கமிஷன்” எனக் கூற வரும் மெடிக்கல் ரெப் எனச் சொல்லப்படும் மருந்தை மார்கெட்டிங் செய்யும் நபர் தான் அவர்.

டாக்டர் தங்களை தேடி வரும் எல்லா மெடிக்கல் ரெப்பையும் பார்த்து விட்டு யார் மருந்தை எழுதினால் அதிக லாபம் என்பதை பார்த்து அந்த கம்பேனி மருந்துகளை எழுதுவதால் தான் மருந்து சந்தையின் மதிப்பு இப்படி லட்சம் கோடிகளை தாண்டி செல்கின்றது.

எல்லா மருத்துவர்களும் இவ்வாறு அல்ல மக்கள் நலனை மட்டுமே கருதும் மருத்துவர்கள் ஏராளம் இருக்கின்றார்கள்.

மெடிக்கல் ரெப்புகளை காக்க வைத்து விட்டு நோயாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மருத்துவர்களும் இருக்கின்றார்கள். இதிலேயே ஒரு மருத்துவர் எப்படி என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

மெடிக்கல் ரெப்பு சொல்-லி தான் இந்த நோய்க்கு இந்த மருந்து சரியா வரும் என்பதை மருத்துவர் தெரிந்து கொள்ளும் நிலை இருந்தால் அது மருத்துவரின் நம்பக தன்மையில் கேள்வி எழுப்பும்.

எனவே பொதுமக்கள் இவைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

சரி நம் விஷயத்திற்கு வருவோம். எனவே இனிமேலும் அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்காமல் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஜெனரிக் மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி 90% வரை உங்கள் பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

வர்த்த ரீதியாக இந்த மருந்தகங்களில் லாபகரம் இல்லை என்பதால் மத்திய அரசு உதவிகளை செய்தும் இதை துவங்க பெரும்பாலானோர் முன் வருவதில்லை.

இதை கருத்தில் கொண்டு சகாயம் ஐஏஸ் அதிகாரி அவர்களின் வழிகாட்டுதழின் படி செயல்படும் மக்கள் பாதை என்ற அமைப்பு சேவை மனப்பான்மையில் முன் எடுத்து தமிழகம் தோறும் மக்கள் மருந்தகம் என்ற பெயரில் மத்திய அரசின் ஜெனரிக் மருந்து கடைகளை திறந்து வருகின்றது.

சென்னையில் பெரம்பூரில் மக்கள் மருந்தகம் செயல்படுகின்றது (8072245709 9080220768
9841394789)

மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள குறைந்த விலையில் மருந்து கிடைக்கும் ஜெனரிக் மருந்துகடைகளின் தொலைபேசி எண்கள் இவைகள்

09884020952 9841359889 9943226377 9500039978 9176394999 9787658212 9840099639

தங்கள் மாவட்டத்தில் தங்கள் பகுதியில் உள்ள ஜெனரிக் மெடிக்கல் ஸ்டோர் பற்றிய விபரங்களை பின் வரும் இணையளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.க்ஷண்க்ஷ்க்ஷஹஹ்ஹ.ஸ்ரீர்ம்/த்ஹய்-ஹன்ள்ட்ஹக்ட்ண்-ம்ங்க்ண்ஸ்ரீஹப்-ள்ற்ர்ழ்ங்ள்/ற்ஹம்ண்ப்-ய்ஹக்ன்

ஜெனரிக் மருந்து கடைகளில் மருந்துகள் வாங்க பின் வரும் ஆப் ம் உதவியாக இருக்கும்

1MG Health App For India https://play.google.com/store/apps/details?id=com.aranoah.healthkart.plus&hl=en_IN

இந்த ஆப் மூலம நீங்கள் பயன்படுத்தும் மருந்தின் மூலக் கூறுகள் என்ன அதே மருந்து குறைந்த விலையில் எவ்வளவு என்ன பிராண்டில் வருகின்றது என்பது உள்ளிட்ட விபரங்களை அறியலாம்.