Home தமிழ்நாடு (Tamil Nadu) ஆம்புலன்ஸ் வர தாமதம், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று காப்பாற்றி இன்ஸ்பெக்டர்

ஆம்புலன்ஸ் வர தாமதம், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று காப்பாற்றி இன்ஸ்பெக்டர்

சாலையில் அடிபட்ட நபர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதை கண்ட சென்னை அண்ணா நகர் கே4 காவல் நிலைய ஆய்வாளர் எம் சரவணன் சிறிதும் தாமதிக்காமல் தனது வாகனத்தில் அடிபட்ட நபரை ஏற்றி ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை தன் மடியில் வைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடனடி சகிச்சை அளிக்க வைத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. இதை தொடர்ந்து ஆய்வாளர் சரவணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றது.

வில்லி-வாக்கத்தை சேர்ந்த கமலக்கண்னன் என்பவர் புழல் சைக்கிள் ஷாப் பகுதிக்கு ஆக்டிவா பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது அவர் மீது ஆட்டோ ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கமலக்கண்னன் படுகாயமடைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளார். ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் அங்கு கூட்டம் கூடியது.

புழல் சிறையில் கைதி ஒருவரை அடைத்து விட்டு தனது காவல் வாகனத்தில் அந்த வழியாக வந்த அண்ணா நகர் ஆய்வாளர் எம் சரவணன் சாலையில் கூட்டமாக இருப்பதை கண்டு வாகனத்தை நிறுத்தி இறங்கி விசாரித்துள்ளார். அடிபட்டு ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடக்கின்றார் ஆம்புலன்சிற்கு போன் செய்தோம் இன்னும் வரவில்லை தாமதமாகின்றது எனக் கூறியுள்ளனர் அங்கு கூடியிருந்தவர்கள்.

இதை கேட்டவுடன் சற்றும் தாமதிக்காமல் ரத்தவெள்ளத்தில் இருந்து கமலக்கண்னன் அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலில் உதவி செய்துள்ளார் ஆய்வாளர் எம் சரவணன்.

பின்னர் அரசு ஸ்டான்-லி மருத்துவமனையில் அவரை அனுமதித்து விட்டு அவரின் மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த பின்னரே அங்கிருந்து புறப்பட்டுள்ளார் ஆய்வாளர் சரவணன். உடனடியாக சிகிச்சை கிடைத்ததால் கமலக்கண்னன் காப்பாற்றப்பட்டார். ஆய்வாளர் சரவணன் அவர்ககளின் இந்த மனித நேயச் செயலை கேள்விபட்டு பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.