Home தமிழ்நாடு (Tamil Nadu) நானும் ஒரு அனாதை தான் அந்த வலி எனக்கு தெரியும் கீதா உருக்கம்

நானும் ஒரு அனாதை தான் அந்த வலி எனக்கு தெரியும் கீதா உருக்கம்

குழந்தையின் அழுகை சத்தம் கேட்பதை அறிந்தவுடன் துணிகளை கூட மாற்ற நேரமில்லாமல் பதறிக் கொண்டு தூங்கி எழுந்த படி நைட்டியுடன் சென்று பச்சிளம் குழந்தையை மீட்ட கீதாவிற்கு பல தரப்பிலிரு-ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கீதாவை அழைத்து பாராட்டி பரிசு வழங்கியுள்ளார்.

அதிகாலை வேலையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு எல்லோரும் என்ன என சுற்றி நின்று வேடிக்கை பார்த்த நேரத்தில் சட்டென வந்து அனைவரையும் விலக்கி விட்டு கீழே விழுந்து கீதா வடிகால் குழாய்க்குள் கையை விட்டு குழந்தையை காப்பாற்றும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி பொதுமக்கள் அனைவரின் பாராட்டை பெற்றது.

அத்தோடு இப்படி செய்த அந்த மாபாதகி யார் அவளும் ஒரு பெண் தானே என்ற வசைபாடல்களும் சமூக வலைதளத்தில் பரவியது.

ஒரே நாளில் கீதாவின் புகழ் உலகெங்கும் பரவியது. பல ஊடகங்கள் அவரை பேட்டி எடுக்க துவங்கியது. ’
மூச்சு விடக் கூட நேரமில்லாமல் எனக்கு பாராட்டுக்கள் வருகின்றது நானும் ஒரு அநாதைதான் அம்மா சிறு வயதில் இறந்து விட்டார்கள், என்னை ஆலந்துரை சேர்ந்த தம்பதியினர் தான் தத்து எடுத்து வளர்த்தனர். தாயில்லாத வேதனை என்ன என்பதை நான் நன்கு அறிவேன், இந்த குழந்தையை வீசி சென்ற பெண்ணிற்கு நான் சொல்கின்றேன் வெளியே வந்து உனக்குரிய தண்டனையை நீயாக பெற்றுக் கொள்” என தனது பேட்டியை துவங்குகின்றார் கீதா

எனக்கு 45 வயதாகின்றது. எனக்கு ஒரு மகன் இருந்தான் அவன் தற்போது இல்லை, தற்போது எனக்கு ஒரு மகள் இருக்கின்றார். அவருக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லை. நான் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் சீரியல் நடிகையாக இருந்தேன். சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்.நகர், 6-வது வீதியில் உள்ள எனது மகளின் வீட்டிற்கு வந்த போது தான் இந்த சம்பவம் நடந்தது.

அதிகாலை வேலையில் சுப்பையா என்ற பால்காரர் தான் வடிகால் குழாய்க்குள் குழந்தையின் அழுகு குரல் கேட்பதாக வந்து என்னிடம் கூறினார். நான் போட்டிருந்த துணியை கூட கவனிக்காமல் வாரி சுருட்டி எழுந்து அங்கே சென்றேன்.

பச்சிளம் குழந்தை என்பதால் நீண்ட நேரம் தொடர்ச்சியாக அதனால் அழ முடியவில்லை. முனுமுனுத்துக் கொண்டிருந்தது. முத-லில் குழந்தை எந்த வாக்கில் உள்ளே உள்ளது என்பதை பார்த்து உறுதி செய்து கொண்டேன்.

இரண்டு குழாக்கு பின் பக்கம் குழந்தை இருந்தது. ஒரு குழாயின் ஓட்டையில் குழந்தையின் தலையும் 2 வது குழயாயின் ஓட்டையில் குழந்தையின் காலும் தெரிந்தது. குழந்தைய குறுக்கு வாக்கில் போட்டு சென்றிருந்தனர். உள்ளே எப்படி குழந்தையை வைத்தார்கள் என்பதே தெரியவில்லை.

உடனே கிழே விழுந்தேன் அதில் எனது கைகளில் ஏற்பட்ட காயங்கள் கூட எனக்கு தெரியவில்லை. லாவகமாக எனது தலையையும் கையையும் குழாய்க்குள் விட்டு குழந்தையை வெளியே எடுத்தேன் குழந்தையின் முகத்தில் பூச்சிகள் இருந்தது. என்ன செய்வது எனத் தெரியவில்லை.
குழந்தை பிறந்து தொப்புள் கொடி கூட நீக்கப்படாமல் இருந்தது. குழந்தை பிறந்த ஒரு சில மணி நேரங்களில் தான் யாரோ வந்த போட்டு சென்றுள்ளார்கள் என்பதை அறிந்தேன்.

அப்பொழுது என் பேரணை தூக்கிய ஒரு உணர்வு எனக்குள் வந்தது. என் மகளை வெண்ணீர் போடச் சொல்லி- குழந்தையை கழுவினேன்.

பின்னர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் முதலுதவி செய்தார்கள்.

வடிகால் குழாய்க்குள் தண்ணீர் இல்லாததால் குழந்தை இன்றைக்கு உயிருடன் நலமாக இருக்கின்றது குழாய்க்குள் தண்ணீர் இருந்திருந்தால் குழந்தையை காப்பாற்றுவது சிரமமாக இருந்திருக்கும் என சம்பவத்தை விவரிக்கின்றார் கீதா.

அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை பாராட்டி பரிசு கொடுத்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம் பல அமைப்பினரும் என்னை வந்து பாராட்டி செல்கின்றனர்.

சுதந்திர தினத்தில் பிறந்த அவனுக்கு சுதந்திரம் என நானே பெயர் வைத்தேன். அவன் நலமுடன் வாழ வேண்டும். இந்த குழந்யை பெற்ற பெண்ணிற்கு சொல்கின்றேன், நீ உண்மையில் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தது உண்மை என்றால் வெளியே வா உனக்குரிய தண்டனையை பெற்றுக் கொள். நீ வெளியே வரவில்லை என்றால் காவல்துறை உன்ன நிச்சயம் பிடிக்கும் உனக்கு தண்டனை வழங்கும்.

குழந்தையை யாரிடமாவது கொடுத்திருந்தால் கூட அவர்கள் வளர்த்திருப்பார்கள். ஆனால் இரக்கமே இல்லாமல் குழாயில் வீசி செல்ல எப்படி உனக்கு மனம் வந்தது நீயும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த பெண் தானே? தவறான வழியில் நீங்கள் செல்வதால் இந்த பிஞ்சுகள் பாதிக்கப்படுகின்றது. தாய் தந்தையின் பேச்சை கேட்டு ஒழுக்கமாக வாழ பாருங்கள் இது போன்று திருட்டு தனமாக குழந்தையை பெற்று தூக்கி வீசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என ஆவேசத்துடன் பேசுகின்றார் கீதா.

தன் மகளுக்கு குழந்தை இல்லை என்பதால் அந்த குழந்தையை தானே வளர்த்துக் கொள்வதாகவும் தன்னிடம் கொடுத்து விடுமாறும் கீதா அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த குழந்தையை கீதா அவ்வப்போது சென்று பார்த்து விசாரித்து வருகின்றனர். குழந்தை நலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தை நலமாக வளர்ந்த பிறகு இந்த சம்பவத்தின் வீடியோவை தற்செயலாக அவன் பார்க்க நேரிட்டால் அவனது மனம் என்ன பாடு பாடும் என்பதை ஒரு கனம் அந்த பெண் யோசித்திருக்க வேண்டாமா ?

சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகள் ஆகியும் பிறந்த குழந்தைக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது. அதுவும் சுதந்திர தினத்தில். ஒரு தாய் கருவுற்ற பின்னர் மருத்துவமனைக்கு செல்லாமல் இருக்கமாட்டார். யாருக்கும் தெரியாமல் ஒரு பெண் குழந்தையை பெற்று எடுக்க முடியாது எனவே அரசாங்கம் இதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். இது போன்ற குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் மருத்துவர்கள் செவிலி-யர்களை கண்டறிந்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்பதே குழந்தை நல ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இந்த சம்பவத்திற்கு பின்னால் உள்ளது ஒழுக்கக் கேடா, பொருளாதார பிரச்சனையா ? , ஏதும் மூட நம்பிக்கையா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்பது விசாரனைக்கு பின்னரே தெரியவரும்.