Home செய்திகள் (News Articles) வருமை வாட்டினாலும் நேர்மை தவறாத சிறுவன்

வருமை வாட்டினாலும் நேர்மை தவறாத சிறுவன்

ஈரோட்டில் 2 ஆம் வகுப்பு படிக்கும் வீட்டு வேலை செய்யும் ஏழை தாயின் மகன் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அப்படியே காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளான்.

நெகிழச்சியான இந்த சம்பவத்தை கேள்விபட்டு சமூக வலைதளங்களில் மாணவன் யாசினுக்கு பாராட்டுக்கள் குவிகின்றது. ஏழை மாணவனின் எதிர்காலமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே பலரின் ஆசை.

ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்த பாட்சா , அப்ரோஸ் தம்பதியின் மகன் முஹம்மது யாசின். இவர் சேமூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.

பள்ளி இடைவேளையின் போது மாணவர்களுடன் விளையாடிய யாசின் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் 50 ஆயிரம் ரூபாய் பணம் கிடப்பதை கண்டதும் அதை எடுத்து உடனடியாக ஆசிரியரிடம் கொடுத்துள்ளார்.

ஆசிரியரை மாணவனின் நேர்மையை கண்டு ஆச்சர்யம் அடைந்து மாணவனை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து சென்று மாணவன் மூலமே அந்த பணத்தை காவல்துறை எஸ் பி சக்தி கணேஷ் அவர்களிடம் ஒப்படைக்க வைத்துள்ளார்.

பணத்தை வாங்கிக் கொண்ட அதிகாரி யாசினை பாராட்டினார்.

யாசினின் தந்தை தேரு தெருவாய் துணிகள் விற்பவர், தாய் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து குடும்பத்தை நடத்துபவர்.

இவ்வளவு ஏழ்மையிலும் உனது நேர்மைக்கு காரணம் என்ன என பத்திரிக்கையாளர்கள் சிறுவனிடம் கேட்ட போது , ”நம்மை போன்று தான் அனைவரும் கஷ்டப்படுவார்கள் எனவே அடுத்தவர் சொத்திற்கு எப்பொழுது ஆசைப்படக் கூடாது’என எனது அப்பா அம்மா அடிக்கடி சொல்லி- வளர்ப்பார்கள் என சிறுவன் அளித்த பதில் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.


ஏதோ ஒரு மூலையில் இருந்த யாசின், அவரின் நேர்மையால் தற்போது ஊரே பேசும் பையனாக மாறியுள்ளார். ஊடகங்களுக்கு பேட்டி, தொலை பேசி அழைப்புகளில் பாராட்டு என யாசின் தற்போது பிசியாக இருக்கின்றார்.

யாசினின் இந்த செயல் அவரது பெற்றோருக்கு நற்பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. ஒரு பெற்றோருக்கு இதை விட சந்தோஷம் வேறு எதுவும் உண்டா

பாராட்டுக்களை தெரிவிக்கின்றார்கள் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. அதே வேலையில் வருமையில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு யாரேனும் உதவினால் நேர்மையான போலி-ஸ் அதிகாரி மக்களுக்கு கிடைப்பார், காரணம் யாசினுக்கு போ-லிஸ் ஆகத்தான் விரும்பம் என்கின்றனர் அப்பகுதியில் வசிப்பவர்கள்.

யாசின் அவர்களின் தந்தையின் தொலைபேசி எண் 8489088903.