Home தமிழ்நாடு (Tamil Nadu) நேர்மையாக செயல்பட்ட காவலருக்கு கமிஷ்னர் பாராட்டு

நேர்மையாக செயல்பட்ட காவலருக்கு கமிஷ்னர் பாராட்டு

சென்னை, புரசைவாக்கம், சோலையம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் ராஜன் என்பவர் பி2 ஓட்டேரி காவல் நிலையத்தில் ஊர்காவல் படை காவலராக பணியாற்றி வருகின்றார்.

இவர் கடந்த 12.7.2018 அன்று மதியம் புரவைவாக்கம் கந்தப்பா ஆச்சாரி தெருவில் நடந்து செல்லும் போது ஏடிஎம் அருகே பண்டல் கட்டப்பட்ட நிலையில் பணம் கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்த ராஜன், அதில் 30 ஆயிரம் ரூபாய் இருப்பதை அறிந்து உடனடியாக அந்த பணத்தை ஜி1 காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

மறு நாள் கஜேந்திரன் (82) என்ற முதியவர் ஒருவர் , வீட்டில் போர் போடுவதற்காக ஏடிஎம் ல் எடுத்த பணத்தை காணவில்லை என புகார் அளிக்க வந்துள்ளார்.

முதியவரிடம் பணம் குறித்த அடையாளங்களை தவற விட்ட இடம் குறித்து கேட்டறிந்து காவல்துறையினர் ராஜன் கண்டெடுத்த பணம் முதியவருடையது என்பதை உறுதி செய்தனர். பின்னர் பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர். புகார் அளித்த உடன் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் முதியவர் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்து சென்றார்.

இதை கேள்விபட்ட சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நேர்மையாக செயல்பட்ட காவலர் ராஜன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டியதோடு வெகுமதியும் வழங்கினார்.