Home தமிழ்நாடு (Tamil Nadu) ஹீரோவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹீரோ சைக்கிள் நிறுவனம்

ஹீரோவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹீரோ சைக்கிள் நிறுவனம்

வரலாறு காணாத வகையில் கேரளா பெரும் பேரிடரை சந்தித்துள்ளது. மத்திய அரசு கேரள வெள்ள பாதிப்புகளை தீவிர இயற்கை பேரிடர் என அறிவித்துள்ளது. 370 க்கும் மேற்பட்டோர் பலி-யாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்தியாவின் பிற மாநிலங்களும் உதவிக் கரம் நீட்டி வருகின்றது. வெள்ளத்தால் நிலைகுலைந்து போன கேரள மக்களுக்கு உதவியதில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது.

தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிவாரண உதவி அறிவித்து டன் கணக்கில் பால்பவுடர் அரிசி உள்ளிட்டவைகளை அனுப்பி வைத்தது. தமிழக இளைஞர்கள் கேரளாவிற்கு சென்று கழுத்தளவு நீரிலும் உதவி செய்தனர். தமிழகத்தை சார்ந்த பல தொண்டு நிறுவனங்கள் உதவி பொருட்களை அள்ளி கொடுத்தது. அதில் குறிப்பாக 8 வயது சிறுமியின் செயல் அனைவரையும் நெகிழச் செய்தது.

விழுப்புரம் மாவட்டம் கேகே சாலை சிவராம் லேஅவுட் பகுதியில் வசிப்பவர் சண்முகம் இவரது மகள் தான் அனுப்பிரியா வயது 8. தன் அப்பாவிடம் சைக்கிள் வாங்கி தரும்படி கேட்டுள்ளார் நீ 6 ஆம் வகுப்பு வந்த பிறகு தான் சைக்கிள் வாங்கி தருவேன் எனக் கூறியுள்ளார் தந்தை. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக உண்டியலில் பணம் செமித்து வந்துள்ளார் அனுப்பிரியா.

தொலைக்காட்சிகளில் கேரள வெள்ள பாதிப்புகளை கண்டதும் அவளது ஈர நெஞ்சம் பதறியுள்ளது. இந்த மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என எண்ணி தான் கடந்த 4 வருடமாக சைக்கிள் வாங்க சேமித்து வைத்த பணத்தை எடுத்து பார்த்துள்ளார். அதில் 8846 ரூபாய்க்கு சில்லரை காசுகள் இருந்துள்ளது. அதோடு சேர்த்து இன்னும் கொஞ்சம் பணம் போட்டு 9 ஆயிரமாக ஆக்கி கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு அனுப்பியுள்ளார் அனுப்பிரியா.

அனுப்பிரியாவிடம் பணத்தை கொடுத்து விட்டால் சைக்கிள் எப்படி வாங்குவாய் ? எனக் கேட்டதற்கு சைக்கிளை விட கேரள மக்கள் படும் கஷ்டம் தான் எனக்கு பெரியது. பிறகு நான் சைக்கிளை சேமித்து வைத்து வாங்கிக் கொள்கின்றேன் எனக் கூறி அனைவரையும் நெகிழ வைத்துவிட்டார் அனுப்பிரியா.

சைக்கிள் வாங்க வைத்த பணத்தை வாரி கொடுத்த சிறுமி பற்றி கேள்விபட்ட ஹீரோ சைக்கிள் நிறுவனம் அந்த சிறுமியின் குணத்தை பாராட்டி புத்தம் புது சைக்கிளை பரிசாக தற்போது வழங்கியுள்ளது.

எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும் உதவிகளுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது இநத் சம்பவம் நமக்கு சொல்லி- தரும் பாடங்களில் ஒன்று.
பல கோடிகளுக்கு முதலாளியான பேடிஎம் ஓனர் வெறும் 10 ஆயிரம் அளித்து விட்டு அதில் விளம்பரம் தேடுகின்றார் அவர் எங்கே. தன் 4 வருட சேமிப்பை வழங்கிய இந்த 8 வயது சிறுமி எங்கே என அனுப்பரியாவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

அதே போன்று தன் நாட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் உண்ணிப்பாக கவனித்து தக்க நேரித்தில் சிறுமிக்கு சைக்கிள் வழங்கி ஊக்கப்படுத்திய ஹீரோ நிறுவனமும் உண்மையில் ஹீரோ தான் என சமூக வலைதளத்தில் அந்த நிறுவனத்துக்கும் பாராட்டுக்கள் குவிந்தது.

வெள்ள நீர் வடிந்து தற்போது கேரளம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. வெள்ளத்தில் பலரின் வீடுகள் இருந்த இடம் தெரியாமல் போயுள்ளது.. வெள்ள நீர் வடிந்தாலும் இருப்பதற்கு இடமில்லாது கேரள மக்கள் தவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள மக்களுக்கு நிவாரண உதவிகள் வந்த வண்ணம் உள்ளது. அதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.