Home தமிழ்நாடு (Tamil Nadu) “கஜா புயல்“ பாராட்டப்பட்ட அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்!

“கஜா புயல்“ பாராட்டப்பட்ட அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்!

தமிழகத்தின், நாகை, திருவாரூர், , ஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கஜா புயலால் வரலாறு காணாத அளவில் உருகுலைந்து போயுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இப்படியோரு புயலை கண்டதில்லை என பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

கஜா புயலால் 63 பேர் பலி-யாகியுள்ளனர் , 23 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளது. ஆயிரக்கணக்கில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது. மற்ற புயல்களை போன்று இல்லாமல் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தவிர புயல் பொதுமக்களுக்கு தென்படும் எந்த வானிலை முன் அறிகுறியும் இல்லாமல் திடிர் என இரவோடு இரவாக வந்து டெல்டா மக்களின் வாழ்கையை சர்வ நாசம் செய்துவிட்டு சென்றுள்ளது கஜா புயல்.

அரசின் கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக இருந்ததால் பெரும் உயிர் சேதகங்கள் தவிர்க்கப்பட்டது. முன்கூட்டியே பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். எதிர்கட்சி தலைவர்கள் கூட அரசின் கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையை பாராட்டினர். குறிப்பாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டா-லின் அரசின் கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். வைகோ உள்ளிட்டோரும் பாராட்டினர். மேலும் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள கமலும் பாராட்டினார்.

அரசு மற்றும் பொதுமக்கள் எதிர் பார்த்ததை விட கஜா புயல் நான்கு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு, நிவாரணப் பணிகளை சரிவர செய்யவில்லை என எதிர்கட்சி தலைவர் ஸ்டா-லின் உள்ளிட்ட தலைவர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

முதலமைச்சர் பழனிச்சாமி அவர்கள் கஜா புயல் பாதிப்பு விபரங்களை பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து விவரித்தார். துறை வாரியாக ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதன் மதிப்பீட்டை பட்டியலி-ட்டு பிரதமரிடம் கடிதம் அளித்தார்.

கஜா புயல் நிவாரணத் தொகையாக மத்திய அரசிடம் தமிழக அரசு 14910 கோடி ரூபாய் கோரியுள்ளது.

ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் கஜா புயலால் சேதமடைந்துள்ளதால் நான்கு மாவட்டங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மின்சார ஊழியர்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டு மின்சாரத்தை மீட்கும் பணிகள் அரசு சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கஜா புயலி-ல் மின்சார ஊழியர்களின் பணி பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது. கழுத்தளவு நீரில் நின்று மின்சார ஊழியிர்கள் மின்கம்பங்களை சரி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி பலரின் பாராட்டை பெற்று வருகின்றது. மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் இருந்த மின்சார ஊழியருக்கு மின்சாரம் தாக்கிய போது அமைச்சர் விஜயபாஸ்கர் அவரை ஓடிச் சென்று மீட்டார். அமைச்சரின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

மேலும் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கஜா புயல் வரும் முன்பாக இரவு பகலாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து பொதுமக்களுக்கு அறிவிப்புகளை செய்து வந்தார். இதுவும் பலரால் பாராட்டப்பட்டது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றது.

சில இடங்களில் நிவாரணப் பொருட்கள் தங்களுக்கு வந்த சேரவில்லை என பொதுமக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்ட சம்பவங்களும் நடைபெற்றது.

எதிர்கட்சிகள் திட்டமிட்டு ஆங்காங்கே இது போன்ற போராட்டங்களை நடத்துவதாகவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் அரசிற்கு ஏற்பட்ட நல்ல பெயரை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனவும் அமைச்சர்கள் விளக்கம் அளித்ததனர்.

’நான்கு மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். உணவு இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய விசயங்கள் இன்றி குழந்தைகளுடன் அலைமோதுகின்றனர். உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டது போன்று நிவாரணப் பணிகளிலும் தீவிரமாக செயல்பட்டு வாழ்க்கையை இழந்து நிற்கும் டெல்டா மக்களுக்கு அரசு விரைந்து உதவிட வேண்டும்” என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.