Home வீடியோ (Video) இனி தயார் மருத்துவமனைகளில் 5 லட்சம் வரை கட்டணமில்லா மருத்துவம்

இனி தயார் மருத்துவமனைகளில் 5 லட்சம் வரை கட்டணமில்லா மருத்துவம்

தனியார் மருத்துவமனைகளில் இனி பொதுமக்கள் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமில்லால் உயர் தர சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் இன்று பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் இது நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கலைஞர் காப்பீட்டு திட்டம் என இதற்கு பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் அது விரிவான முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் என மாற்றப்பட்டது.

இந்த அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இதுவரை வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அதை தற்போது 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்களும் இனி தனியார் மருத்துவமனைகளில் உயர் தர கிச்சை பெறலாம். தமிழகத்தில் 1.52 கோடி குடும்பங்களுக்கு அரசின் இந்த மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

5133 கோடி ரூபாய் வரை இந்த காப்பீட்டு திட்டத்தில் இதுவரை பொதுமக்களின் சிகிச்சைக்கு செலவழிக்கப்பட்டுள்ளது.

அரசின் இலவச மருத்துவ காப்பீட்டை இதுவரை பெறாதவர்கள் இந்த அரசின் இணையதளத்திற்கு சென்று அதை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். மேலும் எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

https://www.cmchistn.com/ இணையதளம்

மருத்துவ காப்பீட்டை நாம் அனைவரும் எடுத்துக் கொள்வதும் மிகவும் அவசியமானதாகும். பலருக்கு இது தெரியாமல் இருப்பதால் திடீர் என நோயோ அல்லது விபத்தோ ஏற்படும் நேரங்களில் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் கஷ்டப்படும் நிலை ஏற்படுகின்றது. சில நேரங்களில் பணம் இல்லாமல் நமது விலைமதிப்பில்லா உயிரை இழக்கவும் நேரிடுகின்றது.

அல்லது ஏதாவது தேவைக்காக நாம் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணம் திடீர் என மருத்துவ செலவில் காலியாகிவிடும்.

இது போன்றவற்றை தவிர்க்க தான் இந்த மருத்து காப்பீட்டு திட்டம். அரசின் மருத்து காப்பீடு கிடைக்காதவர்கள் தனியாரிலும் மருத்து காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம். இதற்கனெ பல்வேறு மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன,

இவைகளில் வருடத்திற்கு 5 அல்லது 10 ஆயிரம் செலுத்தினால் போதும் 5 லட்சம் 10 லட்சம் வரை நாம் நாம் இலவசமாக தனியார் மருத்துவமனைகளில் கிசிக்சை பெற்றுக் கொள்ளலாம். அதிக பணம் பட்டினால் அதிக தொகைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு தகுந்தார் போன்று இதில் பல்வேறு ப்ளான்கள் உள்ளது.

முதலமைச்சரின் உத்தரவு

மருத்து காப்பீட்டு கார்டை காட்டி உள்ளே சென்று விட்டு 5 பைசா கொடுக்காமல் சிகிச்சை பெற்று வெளியே வரலாம்.

நோய், விபத்து என்பது எப்போது வரும் என்பதை யாராலும் கனிக்க முடியாது. வந்த பிறகு என்ன செய்வது என யோசித்து கஷ்டப்படுவதற்கு பதிலாக முன் கூட்டியோ பாதுகாப்பிற்கு இது போன்ற மெடிக்கல் இன்சுரன்ஸ் அதாவது மருத்துவ காப்பீட்டை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு நாம் கட்ட வேண்டிய 5 ஆயிரம் 10 ஆயிரத்தையும் தற்போது அரசே கட்டி அதை முற்றிலும் இவலசமாக ஆக்கியுள்ளது.

10 ஆயிரம் நாம் கட்டினால் எப்படி நமக்கு 10 லட்சம் காப்பீட்டு நிறுவனங்கள் தருகின்றார்கள் என சிலருக்கு சந்தேகம் வரலாம். 1000 பேர் பத்தாயிரம் கட்டினால் அதில் ஒரு சிலருக்கு தான் நோய் ஏற்படும். அதிலும் ஒரு சிலர் தான் 10 லட்சம் வரை சிகிச்சைக்கு செலவு செய்வார்கள். எனவே இதன் மூலம் காப்பீட்டு நிறுவனத்திற்கு லாபம் தான்.