சென்னையில் பட்டுபுடவைகளுக்கு ஆசைப்பட்டு திருமணமான பெண்கள் தங்களின் கற்பை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற வகையில் மாட்டியுள்ளான் சுரேஷ் என்ற கால் டாக்சி ட்ரைவர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கால் டாக்சி ஓட்டி வந்துள்ளான் ரமேஷ் என்பவன். காரில் கஸ்டமர்கள் இல்லாத நேரத்தில் திருமணம் ஆன 35-40 வயது மதிக்க தக்க பெண்களை குறி வைத்து தனது ஆசையை தீர்த்துக் வந்துள்ளான் இந்த சுரேஷ். காரணம் இவனுக்கு திருமணமான பெண்களை தான் பிடிக்குமாம்.
சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை கண்டதும் அவர்கள் அருகில் சென்று காரை நிறுத்தி, பேச்சு கொடுத்து விட்டு பின்னர் ”எனது முதலாளி சுமங்கலி- பூஜை நடத்துகிறார். அதற்காக பெண்களுக்கு பட்டுப் புடவையும் ரூ.10 ஆயிரம் பணமும் தருகிறார். அதற்காக திருமணம் ஆன பெண்களை அவர் தேடிக் கொண்டிருக்கின்றார் நீங்கள் வாருங்கள் உங்களை என் முதலாளியிடம் அழைத்து செல்கின்றேன் உங்களுக்கு புடவையும் பணமும் கிடைக்கும்” என அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி தனது காரில் ஏற வைத்து பின்னர் அவர்களது கற்பை சூரையாடி அவர்கள் நகை ஏதும் அணிந்திருந்தால் அதையும் பிடுங்கிக் கொண்டு எங்காவது இறக்கி விட்டு செல்வானாம் இந்த சுரேஷ்.
பணத்தோடு சேர்ந்து மானத்தை பறிகொடுப்பதால் இவனை பற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்க முன் வரவில்லை. அது இவனுக்கு ஒரு சாதகமாகி போனதால் இத்தனை நாள் அகப்படாமல் இருந்துள்ளான்.
இந்த நிலையில் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு வந்த பெண் இவனை பற்றி புகார் அளித்துள்ளார். இப்படி ஒருவன் பெண்களை ஏமாற்றி பணம் நகை, கற்பை சூரையாடி வருகின்றான் என்பதை விவரித்துள்ளார் பாதிக்கப்பட்ட அந்த பெண்.
புகார் அளித்த அந்த பெண் புகாரோடு சேர்த்து சுரேஷ் பயன்படுத்தும் கார் நம்பரையும் கொடுத்துள்ளார். இதை கேள்விபட்டு அதிர்ந்து போன போ-லிசார் தீவிரமாக செயல்பட்டு அவனை பிடித்துள்ளனர். தான் செய்தவற்றை அவன் போலிசாரிடம் வாக்கு மூலமாக கூறியுள்ளான்.

’35-40 வயது மதிக்க தக்க திருமணம் ஆன பெண்களை குறி வைப்பேன். அவ்வாறு தனியாக நடந்து செல்லும் பெண்களின் அருகே காரை நிறுத்தி பேச்சு கொடுப்பேன் அவர்களுக்கு என் மீது நம்பிக்கை வரும் வரை பேசுவேன். பின்னர் முதலாளி சுமங்கலி- பூஜை நடத்துகிறார் பட்டு புடவையும் 10 ஆயிரமும் கிடைக்கும் எனக் கூறுவேன். அவர்கள் என் காரில் ஏறியதும் ஒதுக்கு புறமான இடத்திற்கு சென்று காரை நிறுத்தி காரின் கண்ணாடியை அடைத்து விட்டு காரின் ஏசியை போடுவேன் பின்னர் எனது வேலையை ஆரம்பிப்பேன். சத்தம் போட்டால் கத்தியை காட்டி மிரட்டுவேன். ஏசி ஓடுவதால் அவர்களின் சத்தம் வெளியே கேட்காது. பணம் நகை வைத்திருந்தால் அவைகளை பறித்துக் கொள்வேன் பின்னர் ஏதாவது ஒரு இடத்தில் இறக்கி விட்டு செல்வேன்.”
இவ்வாறு சுரேஷ் கூறியுள்ளான்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இலவசங்கள் யாராது தருவதாக கூறினால் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இலவசங்களை நம்பி இன்னும் நாம் எதையெல்லாம் இழக்க போகின்றோமோ தெரியவில்லை.இனியாவது மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. வெளியே செல்லும் போது யாராது இலவசங்கள் தருவதாக ஆசை வார்த்தை கூறினால் பெண்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும் ஆசை வார்த்தைகளை நம்பி சென்றால் இலவசங்கள் கிடைப்பதற்கு பதிலாக நம் கற்பே கூட பறிபோகலாம் என்பதையும் உணர்த்துகின்றது இந்த சம்வம்.
எனவே பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்.
