Home செய்திகள் (News Articles) ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு 83 லட்சம் கடனாளியான கூலி தொழிலாளி

ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு 83 லட்சம் கடனாளியான கூலி தொழிலாளி

தமிழகத்தில் தற்போது நூதன முறையில் வங்கி கடன் மோசடி நடைபெற்று வருகின்றது. சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் மற்றும் ரேஷன் கார்டை பெற்று அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் பெயரில் கோடிக் கணக்கில் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் குறித்த அதிர்ச்சி தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளது.

கிராமத்தில் வேலை வெட்டி இல்லாதவர்களை குறி வைக்கின்றது இந்த மோசடி கும்பல். இதற்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக உள்ளவார்கள் என்ற குற்றச்சாட்டு நமக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கின்றது.

மோசடி நடந்தது எப்படி:

உனக்கு ஆயிரம் ரூபாய் தருகின்றேன் உன் ஆதார் கார்டையும் ரேஷன் கார்டையும் கொடு என்னோடு ஒரு நாள் வேலைக்கு வா என்று ஏதும் அறியாத கஷ்டத்தில் இருக்கும் அப்பாவிகளை ஒரு இடத்திற்கு அழைத்து செல்கின்றது இந்த கும்பல்.

அங்கு சென்று ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர்களின் ரேஷன் மற்றும் ஆதார் கார்டை பெற்றுக் கொள்கின்றனர்.

ஆயிரம் ரூபாய் கிடைக்கின்றதே என இதன் விபரீதும் தெரியாத அப்பாவிகள் தங்களின் அடையாள அட்டை ஆவணங்களை கொடுத்து விட்டு வந்து விடுகின்றனர்.

3 மாதம் கழித்து அந்த ஆயிரம் ரூபாய் பெற்ற நபரின் வீட்டிற்கு பேங்கி-லிருந்து ஒரு நோட்டிஸ் வருகின்றது. ”நீங்க கடனாக வாங்கிய 83 லட்சத்தை எப்ப கட்ட போறீங்க என்று.

இதை பார்த்த பின்னர் தான் அவர்களுக்கு தெரிகின்றது தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த மோசடி கும்பல் 300 க்கும் மேற்பட்டவர்களிடம் இதே போன்று ஆதார் மற்றும் ரேஷன் கார்டை பெற்று கிட்ட தட்ட சுமார் 260 கோடி ரூபாய் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு 83 லட்சம் ரூபாய் கடனாளியாகிய விருதுநகரை சேர்ந்த மதிஅழகன் கூறுகையில் “சாப்பாட்டுகே வழியில்லாமல் நடு தெருவுல நிக்கிறேன் சார், நான் எப்படி சார் ரூ83 லட்சம் கடன் வாங்கிருக்க முடியும் இப்ப பேங்க் காரங்க எங்கிட்ட வந்து கடனகேக்குறாங்க“” என புலம்புகின்றார்.

ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு வீட்டிற்கு தெரியாமல் மதிஅழகன் இதை செய்ததால் தன் குடும்பம் தன்னை விரட்டி விட்டதாகவும் தற்போது வாழ வழியில்லாமல் நடுரோட்டில் நிற்பதாக மதிஅழகன் அழுது புலம்புகின்றார்.

மதிஅழகன் போன்று 300 க்கும் மேற்பட்டவர்களை இந்த கும்பல் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதே போன்று விருது நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் நபரும் ஏமாற்றப்பட்டுள்ளார்.

”“நான் வேலை இல்லாமல் இருந்து போது ஒரு நாள் வேலை இருக்கு வா ஆயிரம் ரூபாய் தருவாங்க என வங்கிக்கு அழைத்து சென்று ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்கினார்கள் அப்பொழுது எனக்கு தெரியாது இவர்கள் என் பெயரில் கடன் வாங்க போகின்றார்கள் என, வீட்டிற்கு நோட்டிஸ் வந்த பிறகு தான் எனக்கு இந்த விபரம் தெரிந்தது தினமும் 300 ரூபாய் சம்பாதிக்கும் நான் 57 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக ஸ்டேட் பேங்க் எனக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது“”

என அந்த ஆட்டோ ட்ரைவர் புலம்புகின்றார்.

இந்த மோசடிகள் அனைத்தும் ஸ்டேட் பேங்கில் நடைபெற்றுள்ளது. இதற்கு வங்கி மேனேஜர்களும் உடந்தை என அந்த பகுதி சமூக ஆர்வலர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாக வந்த நோட்டிஸ்களை பார்த்து வெளியில் சொல்ல முடியாமல் 16 பேர் மர்ம மாண முறையில் இறந்துள்ளதாகவும் அந்த சமூக ஆர்வலர் கூறியுள்ளது மேலும் அதிர்ச்சி அளிக்கின்றது.

பெரும்பாலும் விவசாய கடன் என்ற பெயரிலேயே இந்த வங்கி மோசடி நடைபெற்றுள்ளதாகவும், விவசாய கடனை தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்ற நினைப்பில் இந்த மோசடி நடந்துள்ளதாகவும் விருதுநகரை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்த சமூக ஆர்வலர் கூறியுள்ளார்.

சாதாரணமாக ஒருவர் கடன் கேட்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டரை அழைத்து வாருங்கள் என நேரில் பல்வேறு விசாரனைகளை நடத்தும் வங்கி அதிகாரிகள் 260 கோடியை ஏப்படி வாரி கொடுத்தார்கள் அதுவும் சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமல், கடன் பெருபவரின் கையில் தானே பணத்தை கொடுக்க வேண்டும் என்ற பெரிய கேள்வி வங்கி அதிகாரிகளின் மேல் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகின்றது.

இந்த புகார் தொடர்பாக ஒரு சிலர் கைது செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகின்றது.

பொதுமக்கள் இனிமேலாவது விழித்துக் கொள்ள வேண்டும் இலவசமாக பணம் வருகின்றது என்றால் எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தை கை விட வேண்டும்.

ஒரு ஆதார் கார்ட கொடுக்குறதால என்ன ஆயிடப் போகுது, ஒரு கையெழுத்து போட்றதால என்ன ஆயிடப் போகுது என பலர் நினைக்கலாம் அவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம்.

நமது அடையாள அட்டைகளை யாரிடமும் கொடுத்து ஏமாந்து விடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக நமது அடையாள அட்டைகளை ஜெராக்ஸ் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற ஜெராக்ஸ் கடைகளில் தான் பொதுமக்களின் அடையாள அட்டைகள் திருட்டு தனமாக சேகரிக்கப்பபட்டு தவறாக பயன்படுத்தப்பப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது.