Home செய்திகள் (News Articles) 5 ரூபாய்க்கு 3 வேலை உணவு ஆந்திரா வில் ”அண்ணா கேண்டீன்”

5 ரூபாய்க்கு 3 வேலை உணவு ஆந்திரா வில் ”அண்ணா கேண்டீன்”

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆரம்பித்த அம்மா உணவகத்தின் மூலம் ஏழை மக்கள் பலர் பயன் அடைந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. நாடு முழுவதும் இது பேசப்பட்டது. ஆனால் ஜெயலலிதா இல்லாத நிலையில் தற்போது அவைகள் முன்பு போன்று வீரியத்துடன் செயல்படுகின்றதா என அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்புவது ஓரு புறமிருந்தாலும், அம்மா உணவகம் போன்று தற்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயிடு அவர்கள், ”அண்ணா கேன்ட்டீன்” என்ற பெயரில் ஏழைகள் பயன் பெரும் வகையில் தொடர் உணவகத்தை மாநிலம் முழுவதும் திறந்து வைத்துள்ளார்.

ஆந்திராவில் முதற்கட்டமாக 60 இடங்களில் இந்த கேன்ட்டீன் திறக்கப்பட்டுள்ளது.

காலை, மதிய, இரவு உணவு வெறும் 5 ரூபாய்க்கு இங்கு வழங்கப்படுகின்றது. (ஒவ்வொரு வேலைக்கும் 5 ரூபாய்) மேலும் கேன்டீன்கள் மிகவும் சுகாதாரமான முறையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஃபிங்கர் பிரிண்ட் ரீடர் ஃபேஸ் ரிககனேசன் , சிசிடிவி கேமராக்கல் என கேன்டீன்கள் நவீனபடுத்தப்பட்டுள்ளது.

இதை திறந்து வைத்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயிடு , KFC. மெக்டொனால்டு போன்ற உலக தரம் வாய்ந்த உணவங்களுக்கு நிகராக அண்ணா கேன்டின் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா கேன்டீன் துவங்குதற்காக கடந்த 2014 ஆண்டு முதல் ஆந்திர அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்து வந்தது குறிப்பிடதக்கது.

ஒரு நபருக்கு மூன்று வேலை உணவிற்காக சராசரியாக அண்ணா கேன்டீனில் 55 ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும் ஆனால் பொதுமக்களிடம் ஒரு வேலைக்கு 5 ரூபாய் மட்டுமே பெறப்படுவதாக ஆந்திர அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டே ஆந்திர முதலமைச்சர் பொதுமக்களிடம் இதற்காக நன்கொடை வழங்குமாறு நகிழ்ச்சியை துவக்கி வைத்து கேட்டுக் கொண்டார்.
அண்ணா கேன்ட்டீனை திறந்து வைத்த ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயிடு பொதுமக்களுடன் அமர்ந்து கேன்டீனில் வழங்கப்பட்ட உணவை தானும் வாங்கி அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார்!

அடுத்த அடுத்த காலங்களில் இந்த உணவகத்தின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். ஆரம்பித்த அடுத்த நாளே அண்ணா கேட்டின் உணவகங்களில் கூட்டம் அலைமோதுகின்றது.